ஐ.பி.எல் போட்டிகளை மொபைலில் பார்ப்பவரா நீங்கள் ? அப்போ உடனே இந்த ரீசார்ஜ் பண்ணுங்க – விவரம் இதோ

Hot-star

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் கடந்த 5 மாதங்களாக எந்த விதமான விளையாட்டு போட்டிகளும் நடைபெறாமல் இருந்தது. அதன் பின்னர் மெல்ல மெல்ல கால்பந்து, கிரிக்கெட் போன்ற போட்டிகள் துவங்கிவிட்டது. கடந்த மாதம் இங்கிலாந்தில் முதன் முதலாக கொரோனா வைரஸ் அதற்குப்பிறகு இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே டெஸ்ட் தொடர் நடைபெற்றது..

ipl

இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால் எந்த விதமான விளையாட்டுப் போட்டிகளையும் நடத்தக் கூடாது என்று அரசு தடை விதித்தது. ஆனாலும் ஐபிஎல் தொடரை நடத்த விட வேண்டும் என்று பிசிசிஐ முடிவு செய்தது. இதன் காரணமாக தற்போது ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரக நாட்டில் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

செப்டம்பர் 19-ம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடர் நடைபெறும். மேலும் எங்கு ஐபிஎல் தொடர் நடைபெற்றாலும் ரசிகர்களை மைதானத்திற்குள் அனுப்பி பார்க்க வைக்க இயலாது. இது ஆபத்தை அதிகரிக்கும். இதன் காரணமாக யாரும் மைதானத்திற்கு சென்று பார்க்க முடியாது. மேலும் இந்தியாவில் உள்ள ரசிகர்கள் அனைவரும் ஒன்று தொலைக்காட்சியில் அல்லது இணையத்தில் பார்க்க வேண்டும் தொலைக்காட்சியில் பார்ப்பது எளிது.

Star-sports
.
ஆனால் இணையம் வழியாக பார்ப்பதற்காக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஒரு புதிய யுக்தியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது ஹாட்ஸ்டார் செயலியில் இந்த போட்டிகளை பார்க்கலாம். ஆனால் ஐபிஎல் போட்டிகளை ஹாட்ஸ்டார் செயலியில் பார்ப்பதற்கு விஐபி சந்தாவை பெற்றிருக்கவேண்டும்.

hot star 1

- Advertisement -

விஐபி சந்தா வருடத்திற்கு 1499 ரூபாய் ஆகிறது . மேலும் ஐபிஎல் நடைபெறும் காலத்தில் விஐபி சந்தா பெறுவதற்கு மாதத்திற்கு 249 ரூபாய் இரண்டு மாதத்திற்கு என 498 ரூபாய் செலுத்த வேண்டும். அப்படி செலுத்தினால் மட்டுமே ஹாட் ஸ்டார் மூலமாக ஐ.பி.எல் தொடரை பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.