அவரோட ஆட்டம்லாம் எங்ககிட்ட வேலைக்கு ஆகாது, அவரை வீழ்த்தி ஜெயிப்போம் பாருங்க – பென் ஸ்டோக்ஸ் சவால்

Stokes
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் பரபரப்பாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் சூப்பர் 12 சுற்றின் முடிவில் நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளன. குறிப்பாக 2007க்குப்பின் 2வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் இந்தியா குரூப் 2 புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்ததால் நவம்பர் 10ஆம் தேதியன்று நடைபெறும் 2வது அரையிறுதி போட்டியில் குரூப் 1 புள்ளிப் பட்டியலில் 2வது இடத்தை பிடித்த வலுவான இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. அதில் வெற்றி பெறுவதற்காக இரு அணிகளைச் சேர்ந்த வீரர்களும் போட்டி நடைபெறும் அடிலெய்ட் கிரிக்கெட் மைதானத்தில் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Suryakumar Yadav

- Advertisement -

இந்த உலகக்கோப்பை இந்தியாவின் அதிரடியான வெற்றி நடைக்கு பேட்டிங் துறையில் அசத்தி வரும் விராட் கோலி மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் இந்த அரையிறுதி போட்டியிலும் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை பெற்றுக் கொடுப்பார்கள் என்று ரசிகர்கள் உறுதியாக நம்புகின்றனர். அதிலும் குறிப்பாக தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டியில் விராட் கோலி, ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா உட்பட முக்கிய பேட்ஸ்மேன்கள் தடுமாறிய வேளையில் வேறு ஏதோ பேட்டிங்க்கு சாதகமான பிட்ச்சில் விளையாடுவதைப் போல் அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்களை குவித்த சூரியகுமார் யாதவ் தற்போதைய பேட்டிங் வரிசையில் உச்சகட்ட பார்மில் இருக்கும் ஒரே வீரராக ஜொலிக்கிறார்.

தடுத்து நிறுத்துவோம்:
மேலும் இந்த உலகக் கோப்பையில் விராட் கோலியை விட 225 ரன்களை 193.96 என்ற மிரட்டலான ஸ்ட்ரைக் ரேட்டில் எதிரணிகளை பந்தாடி வரும் அவர் கடைசியாக இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 3வது போட்டியில் 216 ரன்களை துரத்தும் போது இதர வீரர்கள் கை விட்ட இந்தியாவின் வெற்றிக்கு 14 பவுண்டரி 4 சிக்ஸருடன் சதமடித்து 117 (55) ரன்கள் குவித்து தனி ஒருவனாக போராடியதை யாரும் மறக்க முடியாது.

Suryakumar yadhav

அப்போட்டியில் தோற்றாலும் முதலிரண்டு போட்டிகளில் வென்றதால் 2 – 1 என்ற கணக்கில் இந்தியா கோப்பையை வென்றது. ஆனால் அன்றைய நாளில் இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணிலேயே அடித்து நொறுக்கிய சூரியகுமார் இப்போட்டியிலும் அச்சுறுத்தலாக இருப்பார் என்று உறுதியாக நம்பலாம். ஆனால் இந்த உலகக் கோப்பையில் எதிரணிகளை பந்தாடும் அவரது ஆட்டம் தங்களிடம் செல்லுபடியாகாது என்று தெரிவிக்கும் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் அவரை தடுத்து நிறுத்தி இப்போட்டியில் வெல்வோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“தற்போது எங்களது அணியின் புதிய கேப்டனாக இருக்கும் ஜோஸ் பட்லரை நாங்கள் அனைவரும் பின்பற்றுகிறோம். பொதுவாக ஒரு கேப்டன் எடுக்கும் முடிவை அனைத்து அணியினரும் பின்பற்றுவார்கள். அதே போன்ற செயலை செய்யும் திறமை அவரிடம் உள்ளது. மறுபடியும் இங்கே நாங்கள் வந்தாலும் இன்னும் இதுவரை எங்களுடைய சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தவில்லை. அதாவது ஒவ்வொரு போட்டியும் எங்களுடையதாக இருக்காது. ஆனால் நாங்கள் இங்கே வெல்வதற்காக வந்துள்ளோம்”

Ben Stokes

“இப்போதிலிருந்து 2 போட்டிகள் இருப்பதால் அதில் அசத்தலாக செயல்பட்டு கோப்பையை வெல்வோம் என்று நம்புகிறோம். அதற்கு முதலில் வியாழக்கிழமை நடைபெறும் இப்போட்டியில் வலுவான வீரர்களை கொண்ட இந்திய அணியை சாய்க்க வேண்டும். குறிப்பாக சூரியகுமார் யாதவ் அபாரமாக செயல்படுகிறார். அதிலும் அவர் விளையாடும் ஷாட்டுகள் உங்களது தலையை சொறிய வைக்கிறது. ஆனாலும் அவரை தடுத்து நிறுத்தி வெற்றி பெறுவதற்கு நாங்கள் முழுமையாக முயற்சிப்போம். தற்சமயத்தில் உச்சகட்ட ஃபார்மில் இருக்கும் அவரை நாங்கள் கட்டிப்போட்டு அதிரடி காட்ட விடக்கூடாது என்று நினைக்கிறேன்” என்று கூறினார்.

இதையும் படிங்க: போன முறையே என்னுடைய பவுலிங்கை கொலை பண்ணிட்டாரு, இம்முறை என்ன ஆகுமோ – இந்திய வீரரால் புலம்பும் மொய்ன் அலி

இப்படி ஆரம்பத்திலேயே வார்த்தை போர் துவங்கியுள்ள இந்த போட்டியில் நிச்சயமாக அனல் பறக்கும் என்பதால் இரு நாடுகளைச் சேர்ந்த ரசிகர்களும் இப்போட்டிக்காக மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

Advertisement