Worldcup : முதன் முதலில் ஒருநாள் போட்டியில் 500 ரன்களை எங்கள் அணியே குவிக்கும். அதன் காரணம் இதுதான் – ஹோப் நம்பிக்கை

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த உலகக்கோப்பை தொடர் இன்று பிரமாண்டமாக துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள்

Hope
- Advertisement -

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த உலகக்கோப்பை தொடர் இன்று பிரமாண்டமாக துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தயாராக உள்ளன. இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.

worldcup 1

- Advertisement -

இன்றைய முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு துவங்க உள்ளது. இந்தப்போட்டியில் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும், டூப்லெஸிஸ் தலைமையிலான தென்னாபிரிக்க அணியும் ஓவல் மைதானத்தில் மோதுகின்றன.

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஷாய் ஹோப் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : எங்களது அணியில் தற்போது அனைத்து வீரர்களும் சிறப்பாக விழாயடி வருகின்றனர். எங்களது அணி இந்த தொடரில் சிறப்பான அதிர்ச்சிகராமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

sri-lanka-vs-west-indies

மேலும், எங்களது அணியில் உள்ள வீரர்கள் அனைவரும் அதிரடியாக ஆடக்கூடிய வீரர்கள் எனவே, எங்களது அணி இந்த உலகக்கோப்பை தொடரில் முதன் முறையாகா ஒருநாள் போட்டியில் 500 ரன்களை அடிக்கும் அணியாக இருக்கும் என்பதில் எனக்கு எந்த ஒரு சந்தேகமும் இல்லை. அதனை இந்த தொடரில் எங்களது அணி சாதிக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது என்று ஹோப் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement