நாங்க 13 ஆவது ஓவர் வரை நல்லாதான் ஆடினோம். அவர் வந்து எல்லாத்தையும் மாத்திட்டாரு – ஹாங்காங் கேப்டன் வருத்தம்

HK
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி துவங்கிய ஆசிய கோப்பை தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி தங்களது முதலாவது போட்டியில் பலம் வாய்ந்த பாகிஸ்தான அணியை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அதனை தொடர்ந்து நேற்று ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்று விளையாடியது.

INDvsHK-1

- Advertisement -

துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் ஹாங்காங் அணியை விட பல மடங்கு பலம் வாய்ந்த இந்திய அணியானது அவர்களை எளிதில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது போலவே இந்திய அணி அவர்களை 40 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணியானது 20 ஓவர்களின் முடிவில் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 192 ரன்களை குவித்தது. பின்னர் 193 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஹாங்காங் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் குவித்ததால் 40 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

IND vs HK Hong Kong Chahal

இந்த போட்டியில் பேட்டிங்கின் போது இந்திய அணி சார்பாக 26 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் என 68 ரன்கள் குவித்த சூரியகுமார் யாதவ் ஆட்டநாயகன் விருதினை பெற்றார். இந்நிலையில் இந்திய அணிக்கு எதிராக தாங்கள் அடைந்த தோல்வி குறித்து ஹாங்காங் அணியின் கேப்டன் பேசுகையில் கூறியதாவது : நாங்கள் பந்து வீசும் போது ஆரம்பத்தில் சிறப்பாக தான் செயல்பட்டு வந்தோம்.

- Advertisement -

13 ஆவது ஓவர்வரை போட்டியில் நாங்கள் அற்புதமாக பந்து வீசினோம். ஆனால் சூரியகுமார் யாதவ் பேட்டிங் செய்ய களத்திற்கு வந்த பிறகு அனைத்தும் மாறியது. இன்றைய போட்டியில் நாங்கள் பீல்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டாலும் சூரியகுமார் ரன்களை குவித்து விட்டார். அவரது பேட்டிங்கை பார்க்க அற்புதமாக இருந்தது.

இதையும் படிங்க : IND vs HK : சொல்வதற்கு வார்த்தையே இல்ல. ஹாங்காங் அணிக்கெதிரான வெற்றி குறித்து பேசிய – ரோஹித் சர்மா

இந்தியா போன்ற பெரிய அணிகளுக்கு எதிராக விளையாடுவது எங்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு. இதன் மூலம் எங்கள் அணியில் உள்ள வீரர்கள் நல்ல அனுபவத்தையும் பெறுவர். இந்த அணியை வழி நடத்துவதில் எனக்கு பெருமையாக இருக்கிறது என ஹாங்காங் கேப்டன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement