WI vs PAK : எங்கள் அணியில் இவரே மாற்றத்தை ஏற்படுத்தும் வீரர் அதனாலே வெற்றி கிடைத்தது – ஹோல்டர் பேட்டி

உலககோப்பை தொடரின் இரண்டாவது போட்டியான நேற்று சர்பிராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணியும், ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் நேற்று ட்ரெண்ட் பிரிட்ஜ்

Holder
- Advertisement -

உலககோப்பை தொடரின் இரண்டாவது போட்டியான நேற்று சர்பிராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணியும், ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் நேற்று ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் மோதின.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சினை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 21.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்களை மட்டுமே அடித்தது. அதிகபட்சமாக பக்கர் சமான் 22 ரன்களும், பாபர் அசாம் 22 ரன்களையும் அடித்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் தாமஸ் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பிறகு 106 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 13.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 108 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அதிகபட்சமாக கெயில் 50 ரன்களை அடித்தார்.

Thomas

போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஹோல்டர் கூறியதாவது : இந்த போட்டியில் எங்களது வீரர்கள் சிறப்பான துவக்கத்தினை அளித்தனர். அதிலும் குறிப்பாக துவக்க ஓவர்களிலே விக்கெட்டுகளை கைப்பற்றினர். அதனை தான் பந்துவீச்சாளர்களிடம் இருந்து நான் எதிர்பார்த்தேன் மேலும், தாமஸ் சிறப்பாக பந்துவீசி அசத்தினார்.

Russell

அதுமட்டுமின்றி எங்களது அணியில் தாக்கத்தை ஏற்படுத்தும் வீரரான ரசல் உள்ளார். அவர் இந்த போட்டியில் சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தினார். அவருடைய பேட்டிங் அல்லது பவுலிங் என ஏதாவது ஒன்றில் சிறப்பாக செயல்பட்டு அணிக்கு வெற்றியை தேடித்தரும் சிறப்பான சக்தி அவரிடம் உள்ளது என்று ஹோல்டர் கூறினார்.

Advertisement