வெற்றி தோல்வி குறித்து யோசிக்க வேணாம். இதை மட்டும் பண்ணுங்க போதும் – கட்டளை போட்ட ஹோல்டர்

Holder
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி ஜமைக்காவில் சற்று நேரத்துக்கு முன் துவங்கியது.

toss

- Advertisement -

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஹோல்டர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். பின்னர் இந்த போட்டி குறித்து பேட்டி அளித்த ஹோல்டர் கூறியதாவது :நாங்கள் முதலில் பந்து வீச தீர்மானித்துள்ளோம். மைதானத்தில் இருக்கும் சிறிய புற்க்கள் முதலில் பந்து வீச உதவிசெய்யும். மேலும் இந்திய அணியின் மிடில் ஆர்டர் விக்கெட்டுகளை விரைவில் நாங்கள் வீழ்த்த இது உதவும் எங்கள் அணியில் இரண்டு மாற்றங்கள் உள்ளன.

இரண்டு வீரர்கள் எங்கள் அணிக்காக புதிதாக அறிமுகம் ஆகிறார்கள். மேலும் இந்த போட்டியில் வெற்றி தோல்வி குறித்து எங்களது வீரர்கள் இப்போது யோசிக்க வேண்டாம். நம்முடைய வேலை இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடுவது மற்றும் நம் ஆட்டத்தில் முன்னேற்றம் காண்பது மட்டுமே.

Miguel

நாம் சரியான வேலையை ஒழுங்காகச் செய்தால் முடிவுகள் நமக்குச் சாதகமாக அமையும். எனவே போட்டியை சரியான கோணத்தில் அணுக இருக்கிறோம் என்று ஹோல்டர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement