IND vs WI : தோனியின் ஸ்டம்பிங் ஆட்டத்தை மாற்றியது. தோல்விக்கு அதுவே காரணம் – ஹோல்டர்

உலக கோப்பை தொடரின் 34ஆவது போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் விராட்கோலி தலைமையிலான இந்திய அணியும், ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதின

Holder
- Advertisement -

உலக கோப்பை தொடரின் 34ஆவது போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் விராட்கோலி தலைமையிலான இந்திய அணியும், ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதின.

ind vs wi

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 268 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக கோலி 72 ரன்களை குவித்தார். தோனி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 56 ரன்களை குவித்தார்.

பின்னர் 269 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 34.2 ஓவர்களில் 143 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஷமி சிறப்பாக பந்து வீசி 16 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். பும்ரா மற்றும் சாஹல் ஆகியோர் 2 விக்கெட் வீழ்த்தினர்.

dhoni

போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஹோல்டர் கூறியதாவது : இந்த மைதானத்தில் எங்களது பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். குறை அனைத்துமே பேட்டிங் துறையில் மட்டும்தான். மேலும் தோனியின் ஸ்டம்பிங் வாய்ப்பை தவற விட்டது ஆட்டத்தின் திருப்புமுனையாகும். தோனியின் இந்த சிறப்பான ஆட்டம் எங்கள் தோல்விக்கு வித்திட்டது என்றே கூறலாம். மேலும் இந்த தொடர் முழுவதும் பீல்டிங் சரியாக இல்லை அதனை நாங்கள் மேம்படுத்தவேண்டும். பந்துவீச்சாளர்கள் அனைவரும் தொடர் முழுவதும் சிறப்பாக பந்து வீசினார்கள் பேட்டிங்கில் நாங்கள் இன்னும் பக்குவமடைய வேண்டும் என்றும் ஹோல்டர் கூறினார்.

Advertisement