WI vs BAN : டாஸ் போட்ட பிறகு முதல் 10 ஓவர்களில் இதனை கணிக்க தவறினோம் – ஹோல்டர்

உலகக் கோப்பை தொடரின் 23 வது போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும், மோர்தாசா தலைமையிலான வங்கதேச அணியும் மோதின

Holder
- Advertisement -

உலகக் கோப்பை தொடரின் 23 வது போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும், மோர்தாசா தலைமையிலான வங்கதேச அணியும் மோதின.

WI vs BAN

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 321 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஹோப் 96 ரன்களும், லீவிஸ் 70 ரன்களும் குவித்தனர்.

- Advertisement -

அதன் பின்னர் 322 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வங்கதேச அணி 41.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 322 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஷாகிப் அல் ஹசன் ஆட்டமிழக்காமல் 124 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

Shakib

போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஹோல்டர் கூறியதாவது : நாங்கள் இந்த போட்டியில் 40 முதல் 50 ரன்கள் குறைவாக அடித்து விட்டோம். இன்றைய போட்டியில் மைதானம் முழுநாளும் சிறப்பாக இருந்தது. டாஸ் வென்ற பிறகு முதல் 10 ஓவர்களில் நாங்கள் சரியாக ஆடவில்லை. அந்த பத்து ஓவர்களில் மைதானத்தின் தன்மையை புரிந்து நாங்கள் ஆடியிருந்தால் மிடில் ஓவர்களில் நிறைய ரன்கள் வந்திருக்கும். மேலும் 320 ரன்கள் என்பது இந்த மைதானத்தில் கட்டுப்படுத்தக்கூடிய இலக்கு இல்லை. மேலும் இந்த தோல்விக்கு எந்த ஒரு மன்னிப்பு கேட்க விரும்பவில்லை. நாங்கள் நன்றாக விளையாடி இருக்க வேண்டும் இனி வரும் போட்டிகளில் நன்றாக விளையாடி வெற்றி பெற முயற்சிப்போம் என்று ஹோல்டர் கூறினார்.

Advertisement