ஐ.பி.எல் தொடரில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் மற்றும் குறைந்த ஸ்கோர் என்ன தெரியுமா ? – லிஸ்ட் இதோ

IPL
- Advertisement -

இந்தியன் பிரீமியர் லீக் ஐபிஎல் தொடர் இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் ஒரு உள்ளூர் டி20 தொடராகும். கடந்த 2008ஆம் ஆண்டு ஆண்டிலிருந்து ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் மொத்தம் 10 அணிகள் இருக்கிறது. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் 8 அணிகள் மட்டுமே விளையாடி வரும். இதுவரை 12 சீசன்கள் நிறைவடைந்துள்ளது. இந்த தொடர் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் இந்தியாவில் நடத்தப்படும். ஆனால் கடந்த 2020ஆம் ஆண்டு கொரானா வைரஸ் காரணமாக செப்டம்பர் 15 முதல் நவம்பர் 10 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி தங்களது தனது 5வது வெற்றியை பதிவு செய்தது.

ipl trophy

- Advertisement -

தற்போது ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியின் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச ரன்கள் பற்றி இதில் பார்ப்போம்.

மும்பை இந்தியன்ஸ் :

அதிகபட்சம் – 2017இல் பஞ்சாப் அணிக்கு எதிராக 223/6க்கு தோல்வியடைந்ததே மும்பையின் அதிகபட்ச ரன்களாகும்.

- Advertisement -

மிகக் குறைவானது – 2018ம் ஹைதராபாத் அணிக்கு எதிராக 87/10 எடுத்து மும்பை அணி தோல்வி அடைந்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் :

- Advertisement -

அதிகபட்சம் – 2010இல் ராஜஸ்தானுக்கு எதிராக 246/5 எடுத்ததாகும்.

மிகக் குறைவானது – 2013 இல் மும்பை அணிக்கு எதிராக 79 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது சென்னை.

- Advertisement -

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் :

அதிகபட்சம் – கொல்கத்தா அணி 2018இல் பஞ்சாப் அணிக்கு எதிராக 245/6 எடுத்தது.

மிகக் குறைவானது – ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 67 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது கொல்கத்தா.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் :

அதிகபட்சம் – 2013இல் பஞ்சாப் அணிக்கு எதிராக 263/5 எடுத்ததே அதிகபட்சமாகும்.

மிகக் குறைவானது – 2017இல் கொல்கத்தாவுக்கு எதிராக 130 ரன்களை எடுத்ததே குறைந்தபட்சமாகும்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் :

அதிகபட்சம் – கடந்த ஐபிஎல்-லில் பெங்களூருக்கு எதிராக 231/2 எடுத்திருந்ததாகும்.

மிகக் குறைவானது – அதே கடந்த ஐபிஎல் தொடரில் மும்பைக்கு எதிராக 136/7 எடுத்திருந்ததாகும்.

ராஜஸ்தான் ராயல்ஸ் :

அதிகபட்சம் – 2010 சென்னை அணியுடன் 246/5 எடுத்ததாகும்.

மிகக் குறைவானது – 2009 பெங்களூர் அணிக்கு எதிராக133/8 எடுத்ததே குறைவானதாக இருக்கிறது

டெல்லி கேப்பிடல்ஸ் :

அதிகபட்சம் – 2011 பஞ்சாப் அணிவுடன் 231/4 எடுத்ததாகும்.

மிகக் குறைவானது – 2017 மும்பை அணிக்கு எதிராக வெறும் 66 ரன்களை டெல்லி அணி எடுத்ததாகும்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் :

அதிகபட்சம் – 2011 ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணியுடன் 232 எடுத்து வெற்றி பெற்றது பஞ்சாப்.

மிகக் குறைவானது – 2017இல் புனே அணிக்கு எதிராக பஞ்சாப் அணி வெறும் 73 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

Advertisement