ரிக்கி பாண்டிங்கிடம் புல் ஷாட் பயிற்சி எடுக்கும் இளம்வீரர். இனி சிக்ஸர் உறுதி – அந்த வீரர் யார் தெரியுமா ?

Ponting
- Advertisement -

கிரிக்கெட்டில் புல் ஷாட் என்பதை சற்று ஆடுவதற்கு கடினமான ஷாட் ஆகும். இந்த ஷாட் சரியாக நுணுக்கமாக ஆட முடியாமல் பல வீரர்கள் பல முறை தங்களது விக்கெட்டுகளை இழந்து உள்ளனர். இந்திய வீரர்களுக்கு பெரும்பாலும் ஷார்ட் பால் வீசும் போது புல் ஷாட் ஆடாமல் தங்கள் விக்கெட்டுகளை இழந்து விடுவார்கள் என்ற ஒரு பொதுப்பார்வை உலக கிரிக்கெட்டில் இருந்து வருகிறது.

Rohith

- Advertisement -

சுரேஷ் ரெய்னா போன்ற வீரர்கள் ஷாட் ஆடுவதில் சற்று சிரமம். ஆனால் ரோகித் சர்மா போன்றவர்கள் மிக அற்புதமாக புல் ஷாட் ஆடி பந்துகளை சிக்சருக்கு அடித்து விடுவார்கள். இதிலும் குறிப்பாக ஆஸ்திரேலிய வீரர்கள் மிகச் சிறப்பாக இந்த ஷாட் ஆடுவதில் வல்லவர்கள். விவியன் ரிச்சர்ட்ஸ், ஆடம் கில்கிறிஸ்ட், மேத்யூ ஹைடன், ஜஸ்டின் லாங்கர், இன்சாமாம் உள் ஹக், சச்சின் டெண்டுல்கர் போன்ற பல வீரர்கள் இதனை தெளிவாக ஆடுவதில் வல்லவர்.

குறிப்பாக ரிக்கி பாண்டிங் இந்த ஷாட் சிறப்பாக ஆடுவார். தற்போது அவர் டெல்லி கேப்பிடல் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கிறார். இந்த அணியில் பல இளம் வீரர்கள் இருக்கிறார்கள். இந்த இளம் வீரர்களுக்கு புல் ஷாட் எப்படி அடிப்பது என்று கற்றுக் கொடுத்து வருகிறார் ரிக்கி பாண்டிங். சமீபத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக சிம்ரன் ஹிட்மியர் 24 பந்துகளில் 45 ரன்கள் வெளுத்துக் கட்டினார். இதில் 5 சிக்சர்கள் அடித்து இருந்தார்.

hetmyer

பொதுவாக இவர் புல் ஷாட் ஆடுவதில் சிரமம் காட்டுபவர். இவர் ஆனால் இவர் அடித்த முதல் சிக்ஸர் இந்த போட்டியில் ஃபுல் ஷாட் ஆக இருந்தது. இது தொடர்பாக பேசிய சிம்ரன் ஹெட்மையர் கூறியதாவது… ரிக்கி பாண்டிங் எங்களுடன் இருப்பது அருமையாக இருக்கிறது. தற்போது எனக்கு அவர் புல் ஷாட் ஆட கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். கடந்த சில போட்டிகளாக எனக்கு ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசி வருகிறார்.

hetmyer 1

இப்போது எனது புல் ஷாட்டை அவர் சரி செய்து விட்டார். இனி ஷார்ட் பிட்ச் பந்து வீசினால் சிக்ஸர் தான் .மேலும் ஆட்டத்தை முடிக்கும் கலையையும் எனக்கு கற்றுக் கொடுத்து வருகிறார். சூழ்நிலைக்கு தகுந்தவாறு என்னை இறக்கிவிட்டு கொண்டிருக்கிறார். இப்போது ஃபினிஷிங் ரோலில் நான் ஒர்க் செய்து கொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

Advertisement