கோடிகளில் எகிறிய ஏலத்தொகை. சந்தோஷத்தில் ஆட்டம்போட்ட ஹெட்மயர் – வைரலாகும் வீடியோ

Hetmyer
- Advertisement -

இந்தியாவில் அடுத்த ஆண்டு 2020 ஐ.பி.எல் கோப்பைக்கான வீரர்களின் ஏலம் நேற்று 19 ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் சுமார் 971 வீரர்கள் ஏலம் விட பதிவு செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் அதில் 332 பேர் மட்டுமே ஏலத்திற்கு தேர்வு செய்யப்பட்டனர். இந்த ஐபிஎல் ஏலத்தில் மொத்தம் 8 அணிகளின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

Hetmyer 1

- Advertisement -

இந்த ஏலத்தில் கடந்த முறை பெங்களூர் அணிக்காக ஆடி வந்த வெஸ்ட் இண்டீஸ் நாட்டைச் சேர்ந்த அதிரடி ஆட்டக்காரரான ஹெட்மையர் இந்த ஆண்டு அந்த அணியில் இருந்து கழற்றி விடப்பட்டார். அவருக்கான ஏலத்தொகை அடிப்படை விலையாக 50 லட்சம் என்று நிர்ணயிக்கப் பட்ட நிலையில் அவருடைய ஏலத்தொகை சூடுபிடித்தது.

ஏனெனில் அவர் இந்திய அணிக்கு எதிராக அதிரடியாக சதம் அடித்து தனது பார்மை நிரூபித்துள்ளார். மேலும் 22 வயதே ஆன இளம் வீரரின் ஸ்ட்ரைக் ரேட் அதிகம் என்பதாலும், விரைவாக ரன்களை சேர்க்கும் பக்கா டி20 பிளேயர் என்பதாலும் அவரின் மீது அனைத்து அணிகளின் பார்வையும் பட்டது. எனவே அவருடைய ஏலம் கிடுகிடு உயர்ந்தது. இறுதியில் 7.75 கோடிக்கு அவரை வாங்கியது.

அவரின் தேர்வு டெல்லி அணிக்கு மேலும் பேட்டிங் பலத்தை கூட்டி உள்ளது என கூறலாம். ஏனெனில் துவக்க வீரர்களை பலமாக கொண்ட டெல்லி அணியில் தற்போது ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் பண்டுடன்,ஹெட்மயர் இணைந்துள்ளதால் டெல்லி அணி மேலும் பலப்பட்டுள்ளது. தனது ஏலாத்தொகையை இத்தனை கோடிகளை என்பதை அறிந்த ஹெட்மயர் ஹோட்டல் அறையில் நடனம் ஆடும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement