
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் அடுத்தடுத்து ஓய்வு பெற்றுள்ளார்கள். சமீபத்திய நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்களில் இந்தியா அடுத்தடுத்து படுதோல்விகளை சந்தித்தது. அந்தத் தோல்விகளுக்கு முக்கிய காரணமான அவர்களை பிசிசிஐ அடுத்த இங்கிலாந்து தொடரில் கழற்றி விட முடிவெடுத்தது. அதற்கு முன்பாக அவர்களாகவே ஓய்வு பெற்றது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
முன்னதாக ஆஸ்திரேலிய தொடரில் ஒரு அரை சதத்தை கூட அடிக்க முடியாமல் திணறிய ரோஹித் சர்மா கடைசிப் போட்டியில் தன்னைத்தானே நீக்கிக்கொண்டார். மறுபுறம் முதல் போட்டியிலேயே சதத்தை அடித்த விராட் கோலி தொடர்ந்து அசத்துவார் என்று நம்பப்பட்டது. ஆனால் அதற்கடுத்தப் போட்டிகளில் தொடர்ச்சியாக அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்துகளில் விக்கெட்டை இழந்த விராட் கோலி பலரையும் ஏமாற்றமடைய வைத்தது.
இந்நிலையில் ஸ்பின்னர்களுக்கு எதிராக சுழன்று வரும் பந்தை விராட் கோலி தொடர்ந்து டிரைவ் அடிக்க முயற்சித்து தம்முடைய விக்கெட்டை இழந்ததாக ஒரு ரசிகர் ட்விட்டரில் வீடியோவுடன் பதிவிட்டுள்ளார். ஆனால் அதே போன்ற பந்தில் அவுட்டான ரோகித் சர்மா நாளடைவில் முன்னேற்றத்தை சந்தித்து ஸ்வீப் உள்ளிட்ட வெவ்வேறு ஷாட்டுகளை அடித்ததாக அந்த ரசிகர் கூறியுள்ளார்.
இருப்பினும் விராட் கோலி அதில் முன்னேறுவதற்கு எந்த முயற்சியும் செய்யவில்லை என்று அந்த ரசிகர் கூறியுள்ளார். மறுபுறம் ஆரம்பக் காலங்களில் தடுமாறிய ரோஹித் சர்மா முன்னேற்றி வெவ்வேறு ஷாட்டுகளை அடித்ததாலேயே 30 வயதுக்குப்பின் டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்தியதாக அந்த ரசிகர் பதிவிட்டுள்ளார். அதைப் பார்த்த முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் ஹெர்சல் கிப்ஸ்.
“இது போன்ற விஷயங்களில் பேட்ஸ்மேனுக்கு பேட்டிங் பயிற்சியாளர் தான் ஸ்கோர் செய்வதற்கான கூடுதல் விருப்பங்களை வழங்க வேண்டும். இதற்காக பின்னர் எனக்கு நன்றி சொல்லுங்கள்” என்று அந்த ரசிகருக்கு பதிலளித்தார். அதற்கு மற்றொரு ரசிகர். “டெக்னிக்கல் அளவில் இந்த 2 பேரில் யார் சிறந்த பேட்ஸ்மேன்? என்று நீங்கள் நினைக்கிறீர்கள்” என்று கேட்டார்.
இதையும் படிங்க: டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் புதிய உச்சம் தோட்ட ரவீந்திர ஜடேஜா – அசத்தல் சாதனை
அதற்கு கிப்ஸ். “டெக்னிக்கல் அளவில் கோலியை விட ரோகித் எப்போதும் சரியானவர். ஆனால் விராட் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் டாமினேட் செய்ய விரும்பினார். அதுவே அவர்களுக்கு இடையேயான வித்தியாசம்” என்று பதிலளித்தார். அதற்கு ரோகித்தை விட விராட் கோலி தான் டெக்னிக்கல் அளவில் சிறந்த பேட்ஸ்மேன் என்று மற்றொரு ரசிகர் பதிலளித்தார். அந்த ரசிகருக்கு கிப்ஸ் இறுதியாக. “எப்போதாவது நீங்கள் ரோகித் 4 – 5வது ஸ்டம்ப் லைனில் வரும் பந்தில் ஃடிபன்ஸ் விளையாடி பார்த்திருக்கிறீர்களா? அதை செய்து விராட் எவ்வளவு முறை அவுட்டாகி இருக்கிறார் என்பது தெரியுமா? எனவே கோலியை விட ரோஹித் டெக்னிக்கல் அளவில் சிறந்த பேட்ஸ்மேன்” என்று பதிலளித்தார்.