- Advertisement -
இந்திய கிரிக்கெட்

பாண்டியாவுக்கு பதில் சூரியகுமார் டி20 கேப்டனாக நியமிக்கப்பட்டது ஏன்? பிசிசிஐ தரப்பில் வெளியான தகவல்

இம்மாத இறுதியில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியா அங்கு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் விளையாடுகிறது. அந்தத் தொடர்களுக்கான இந்திய அணி நேற்று வெளியிடப்பட்டது. அதில் டி20 தொடரின் கேப்டனாக சூரியகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. ஏனெனில் 2024 டி20 உலகக் கோப்பையில் ஹர்திக் பாண்டியா தான் துணை கேப்டனாக செயல்பட்டார்.

அத்துடன் 2022க்குப்பின் ரோஹித் ஓய்வெடுத்த பெரும்பாலான டி20 தொடர்களில் பாண்டியா தான் கேப்டனாக செயல்பட்டார். எனவே ஐபிஎல் தொடரில் மும்பை அணியை போலவே ரோஹித்துக்குப் பின் ஹர்திக் பாண்டியா இந்திய டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் தற்போது புதிய பயிற்சியாளராக கௌதம் கம்பீர நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

- Advertisement -

காரணம் என்ன:
எனவே அவர் சூரியகுமாரை புதிய கேப்டனாக பரிந்துரை செய்ததாக கடந்த சில தினங்களாக செய்திகள் காணப்பட்டன. ஏனெனில் காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா அனைத்து தொடர்களிலும் விளையாடுவாரா என்பது உறுதியாக தெரியவில்லை. எனவே 2024 டி20 உலகக் கோப்பைக்கு சூரியகுமாரை கேப்டனாக வளர்க்க கம்பீர் விரும்புவதாக செய்திகள் வெளிவந்தன.

தற்போது சூரியகுமார் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அந்த செய்திகள் உண்மையாகியுள்ளது என்றே சொல்லலாம். இந்நிலையில் ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா மீது மும்பை வீரர்களே நம்பிக்கை வைத்து நல்ல அபிப்பிராயத்தை தெரிவிக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது. அதே போல தேர்வுக்குழு கேட்ட போது மற்ற இந்திய வீரர்களும் பாண்டியா மீது நம்பிக்கை வைத்து ஆதரவளிக்கவில்லை என்றும் தெரிகிறது.

- Advertisement -

அத்துடன் மற்ற இந்திய வீரர்கள் ஆதரவு தெரிவிக்கும் சூரியகுமாருடன் இணைந்து வேலை செய்ய கௌதம் கம்பீரும் விருப்பம் தெரிவித்ததாக தெரிய வருகிறது. அதனாலேயே சூரியகுமார் டி20 கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இது பற்றி பெயர் வெளியிட விரும்பாத பிசிசிஐ நிர்வாகி இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையத்தில் பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க: என்மேல அவங்க 2 பேரும் வச்ச நம்பிக்கை தான் என்னை சிறப்பா செயல்பட வைத்தது – ஷிவம் துபே ஓபன்டாக்

“ஹர்திக் பாண்டியா மும்பை அணியின் உடைமாற்றும் அறையை எப்போதும் வெல்லவில்லை. அங்கிருந்த பல வீரர்கள் அவரை நம்பவில்லை. அதே போல தேசிய அணியிலும் அவரை பெரும்பாலான வீரர்கள் நம்பவில்லை. ஹர்திக் பாண்டியாவை விட சூரியகுமார் தலைமையில் விளையாடுவது நன்றாக இருக்கும் என்று பல வீரர்கள் வாரியத்திடம் தெரிவித்தனர். புதிய பயிற்சியாளரும் பணிச்சுமை பற்றி யோசிக்காமல் தொடர்ந்து விளையாடக்கூடிய வீரரையே விரும்புகிறார்” என்று கூறினார்.

- Advertisement -