என்மேல அவங்க 2 பேரும் வச்ச நம்பிக்கை தான் என்னை சிறப்பா செயல்பட வைத்தது – ஷிவம் துபே ஓபன்டாக்

Dube
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2024-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் போது அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிவம் துபே அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து இருந்தார். ஸ்பின்னர்களை மிடில் ஓவரில் அடித்து நொறுக்கும் அவரது அந்த அதிரடியை கண்ட இந்திய அணியின் தேர்வுக்குழுவும் டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அவருக்கு இடத்தினை வழங்கியது.

ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் சிறப்பான ஃபார்மில் இருந்த ஷிவம் துபே இரண்டாம் பாதியில் ஃபார்ம் அவுட் ஆனார். அதன் பிரதிபலிப்பு டி20 உலக கோப்பையிலும் வெளிப்பட்டது. முதல் போட்டியில் இருந்து இறுதிப்போட்டி வரை அவர் இடம் பெற்று இருந்தாலும் ஆரம்ப கட்ட போட்டிகளில் பேட்டிங் செய்ய மிகவும் தடுமாறினார்.

- Advertisement -

இருந்தாலும் கேப்டன் ரோஹித் மற்றும் பயிற்சியாளர் டிராவிட் ஆகியோர் அவர் மீது நம்பிக்கை வைத்து இறுதிவரை அவருக்கு வாய்ப்பினை வழங்கியிருந்தனர். அந்த வகையில் துவக்க போட்டிகளில் ஷிவம் துபே சொதப்பி இருந்தாலும் இறுதி போட்டியில் 16 பந்துகளில் 27 ரன்கள் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

இந்நிலையில் கடினமான நேரத்தில் தனக்கு ஆதரவளித்த கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் டிராவிட் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

உலக கோப்பை பயணம் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தது. இறுதிப்போட்டி ஒரு முக்கியமான தருணம். சரியான நேரத்தில் அணிக்காக என்னால் பங்களிப்பை வழங்க முடிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். அந்த தொடர் முழுவதுமே பல்வேறு விடயங்களை கற்றுக் கொண்டேன். ரோகித் சர்மா மற்றும் டிராவிட் ஆகியோர் கொடுத்த ஆதரவு நம்ப முடியாத அளவிற்கு இருந்தது.

இதையும் படிங்க : காமெடி பண்றிங்களா.. சதமடித்த சாம்சனை கழற்றி விட்டு அவரை தேர்ந்தெடுத்தது ஏன்? முன்னாள் வீரர் விளாசல்

ஏனெனில் உண்மையாகவே எனது ஆட்டம் சிறப்பாக அமையவில்லை என்றாலும் எனது ஆட்டத்தின் மீது நம்பிக்கை வைத்து அவர்கள் இறுதி வரை எனக்கு வாய்ப்பினை வழங்கினார்கள். அவர்களது அந்த ஆதரவு என்னுடைய சிறப்பான செயல்பாட்டிற்கு காரணமாகவும் அமைந்தது என ஷிவம் துபே கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement