வாயை வெச்சுகிட்டு இருந்தா தானே, அக்தருக்கு ஷமி கொடுத்த கர்மா பதிலடிக்கு காரணமே இது தான் – வைரலாகும் பழைய வீடியோ இதோ

Shami-and-Akhtar
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் பரபரப்பாக நடைபெற்று முடிந்துள்ள 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. இந்த தொடரில் ஆரம்பத்திலேயே இந்தியா மற்றும் ஜிம்பாப்வேவிடம் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்ததால் கதை முடிந்ததாக கருதப்பட்ட பாகிஸ்தான் கடைசி நேரத்தில் நெதர்லாந்திடம் தென்னாப்பிரிக்கா தோற்று வெளியேறிய அதிர்ஷ்டத்தை பயன்படுத்தி அரையிறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி பைனலுக்கு தகுதி பெற்றது. அதனால் 1992 உலகக்கோப்பை மேஜிக்கை மீண்டும் நிகழ்த்துவோம் என்று வாயில் மட்டும் பேசிய பாகிஸ்தான் களத்தில் பந்து வீச்சில் உயிரை கொடுத்த போராடிய போதிலும் பேட்டிங்கில் 150 ரன்களை எடுக்கத் தவறியதால் பரிதாபமாக தோற்றது.

முன்னதாக இதே தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா லீக் சுற்றில் பாகிஸ்தானை யாராலும் மறக்க முடியாத வகையில் தோற்கடித்தாலும் நாக் அவுட் சுற்றில் இதே இங்கிலாந்திடம் சரமாரியாக அடி வாங்கி ஒரு விக்கெட்டை கூட எடுக்காமல் படுதோல்வியை சந்தித்து வெளியேறியது. அந்த நிலைமையில் ஆரம்பத்திலேயே பாகிஸ்தான் இந்த வாரம் வெளியேறினால் இந்தியா செமி ஃபைனலுடன் அடுத்த வாரம் வெளியேறிவிடும் என்று வம்பிழுத்த முன்னாள் வீரர் சோயப் அக்தர் இங்கிலாந்திடம் ஒரு விக்கெட் கூட எடுக்காமல் தோற்றதால் ஃபைனலில் எங்களுடன் மோத உங்களுக்கு தகுதியில்லை என்று விமர்சித்தார்.

- Advertisement -

கர்மா ட்வீட்:
ஆனால் நெதர்லாந்து கொடுத்த அதிர்ஷ்டத்தால் ஃபைனலுக்கு வந்து விட்டு இவ்வளவு தலைகனம் ஆகாது என்ற வகையில் அவருக்கு இந்திய ரசிகர்கள் பதிலடி கொடுத்தனர். மேலும் கடைசியில் பாகிஸ்தான் தோற்றதால் அத்தனை இந்திய ரசிகர்களும் தேடிப்போய் அவரை கலாய்த்து தள்ளினார்கள். குறிப்பாக பாகிஸ்தான் தோற்ற போது மனம் உடைந்ததாக ட்விட்டரில் பதிவிட்டிருந்த அவருக்கு “சாரி அண்ணா. இது தான் கர்மா” என்று தேடிப்போய் இந்திய வீரர் முகமது ஷமி பதிலடி கொடுத்து கலாய்த்தது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

இருப்பினும் எத்தனையோ முன்னாள் இந்நாள் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு மத்தியில் ஷமி மட்டும் வம்படியாக தேடி சென்று அவருக்கு பதிலடி கொடுத்ததற்கான காரணத்தை அறியாமல் ரசிகர்கள் குழம்பினார்கள். இந்நிலையில் ஜஸ்பிரித் பும்ரா காயத்தால் விலகியதால் கடைசி நேரத்தில் எதிர்பாராத வகையில் தேர்வு செய்யப்பட்ட முகமது ஷமி நல்ல பவுலர் என்றாலும் தற்போதைய இந்திய அணியில் பொருந்தக்கூடியவர் அல்ல என்றும் அவராலேயே உலகக் கோப்பையில் இந்தியா தோல்வியை சந்தித்ததாகவும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டிக்கு பின் சோயப் அக்தர் விமர்சித்திருந்தார். இது பற்றி வழக்கம் போல அவர் வெளியிட்ட ஒரு பழைய வீடியோவில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இந்தியா அவருடைய கேப்டனை பற்றி யோசிக்க வேண்டும். அணி நிர்வாகமும் இந்த தோல்விக்கான பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதை விட முகமது ஷமி கடைசி நேரத்தில் திடீரென்று அணிக்குள் சேர்க்கப்பட்டார். அவர் நல்ல பவுலர் என்றாலும் இந்திய அணிக்குள் பொருந்தக் கூடியவர் அல்ல” என்று கூறியிருந்தார். அதை அப்போதே கவனித்த முகமது ஷமி பொறுமையாக காத்திருந்து பாகிஸ்தான் தோற்றதும் அப்படி ஒரு பதிலை கொடுத்து தக்க பதிலடி கொடுத்துள்ளார். அந்த வகையில் இது தான் காரணமா என்பதை அறியும் ரசிகர்கள் எப்போதுமே வாயை கட்டுப்படுத்தாமல் அளவுக்கு அதிகமாக பேசும் சோயப் அக்தருக்கு இந்த மாதிரியான பதிலடி தேவை தான் என்று சமூக வலைதளங்களில் பேசுகிறார்கள்.

மறுபுறம் என்ன தான் பதிலடி கொடுத்தாலும் இந்த உலகக் கோப்பையில் 6 போட்டிகளில் 6 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்த முகமது ஷமி எதிர்பார்க்கப்பட்டதை விட சுமாராகவே செயல்பட்டார். குறிப்பாக இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் விக்கெட் எடுக்காத அவர் இந்த உலகக் கோப்பையில் அதிர்ஷ்டம் காரணமாக உள்ளே வந்தார். ஆனால் அந்த வாய்ப்பில் சுமாராக செயல்பட்டதால் வரும் நாட்களில் இந்திய டி20 அணியில் அவரை மீண்டும் பார்க்க வாய்ப்பு குறைவாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement