தேங்க் யூ பொல்லார்ட் ! வெஸ்ட் இண்டீஸ் சாட்டையடி மன்னனின் பயணமும் சாதனைகளும் – முழுத்தகவல் இதோ

pollard
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெள்ளை பந்து கேப்டனாக இருந்து நட்சத்திர அதிரடி வீரர் கைரன் பொல்லார்ட் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று முன்தினம் அதிரடியாக அறிவித்தார். டிரினிடாட்டை சேர்ந்த இவர் கடந்த 2007ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமானார். அதில் அசத்திய அவர் அடுத்த வருடமே டி20 போட்டிகளிலும் தனது நாட்டிற்காக விளையாடும் வாய்ப்பை பெற்று அதன்பின் தனது அதிரடியான ஆட்டங்களால் முக்கிய வீரராக உருவெடுத்தார்.

அந்த சமயங்களில் உலகையே மிரட்டும் அதிரடி வீரர்களாக உருவெடுத்த கிறிஸ் கெயில், ட்வயன் ப்ராவோ, டேரன் சம்மி, லெண்டில் சிமன்ஸ் போன்ற வெஸ்ட் இண்டீஸ் வீரர்களில் ஒருவராக இவரும் வளரத் தொடங்கினார். அதிலும் 2010 போன்ற காலகட்டங்களில் தங்களது அதிரடி ஆட்டத்தால் உலகிற்கே அச்சுறுத்தலை அளித்த வெஸ்ட் இண்டீஸ் அதிரடிப் படையில் இவரும் ஒருவராக வலம் வந்தார்.

- Advertisement -

சாட்டையடி பொல்லார்ட்:
அந்த வகையில் கடந்த 2012-ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற டி20 உலக கோப்பையை முதல் முறையாக வென்று சாதனை படைத்த டேரன் சம்மி தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியில் இவரும் முக்கிய பங்காற்றினார். இருப்பினும் அதன்பின் அவரின் பேட்டிங்கில் சரிவு ஏற்பட்ட நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடர்ச்சியாக இடத்தை பிடிக்க தடுமாறிய அவர் ஒரு கட்டத்தில் அந்த அணியில் இருந்து வெகுதூரம் சென்று ஐபிஎல் உட்பட உலகின் அனைத்து டி20 தொடர்களிலும் தவறாமல் அட்டனன்ஸ் போட்டு சரவெடியாக பேட்டிங் செய்தார்.

அப்படியே காலங்கள் உருண்டோட அவ்வப்போது வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம் பிடித்து வந்த அவர் கடந்த 2019-ஆம் ஆண்டு ஒருநாள் மற்றும் டி20 வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கான கேப்டனாக அறிவிக்கப்பட்டார். குறிப்பாக சமீபத்தில் கடந்த பிப்ரவரி மாதம் இந்திய மண்ணில் நடந்த ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் அவர் கேப்டனாக செயல்பட்ட போதிலும் அந்த அணி ஒரு போட்டியை கூட வெல்ல முடியாமல் வைட்வாஷ் தோல்வியை பதிவு செய்தது.

- Advertisement -

இருப்பினும் கடந்த 2021இல் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4 – 1 என்ற கணக்கிலும் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3 – 2 என்ற கணக்கிலும் கைரன் பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றி அசத்தியது.

திடீர் ஓய்வு:
இப்படி முடிந்த அளவுக்கு சிறப்பாக செயல்பட்டு வந்த அவர் 34 வயது மட்டுமே கடந்துள்ள நிலையில் திடீரென சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடைபெறுவது அறிவித்துள்ளார். ஆனாலும் ஐபிஎல் போன்ற பிரீமியர் லீக் டி20 தொடரில் விளையாடுவதற்காகவே இந்த முடிவை அவர் எடுத்துள்ளார் என்றும் கருதப்படுகிறது. இந்த நிலையில் அவர் படைத்த சாதனைகளை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

1. கடந்த 2007 – 2022 வரை மொத்தம் 224 ஒருநாள், டி20 போட்டிகளில் 4275 ரன்களை வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக எடுத்துள்ள அவர் 3 சதங்கள் 9 அரை சதங்கள் அடித்துள்ளார். அதில் 234 சிக்சர்களை பறக்க விட்ட அவர் 97 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.

2. ஆனால் இந்த 15 வருட கேரியரில் ஒருமுறை கூட அவர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியதில்லை. இதன் வாயிலாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடாமல் அதிக சர்வதேச போட்டிகளில் விளையாடிய 2-வது வீரர் (224 போட்டிகள்) என்ற பெருமையை தென்னாப்பிரிக்காவின் டேவிட் மில்லருக்கு (238 போட்டிகள்) பின் பெற்றுள்ளார்.

- Advertisement -

3. மொத்தம் 101 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அதிக டி20 போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனை படைத்துள்ளார். மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடாமல் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

4. கடந்த 2021இல் சொந்த மண்ணில் நடந்த இலங்கைக்கு எதிரான ஒரு டி20 போட்டியில் இலங்கை வீரர் அகிலா தனஞ்சயா வீசிய ஒரே ஓவரில் 6 சிக்சர்களை பறக்கவிட்ட அவர் இந்தியாவின் யுவராஜ் சிங்கு பின் (2007) சர்வதேச டி20 போட்டிகளில் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடித்த 2-வது பேட்ஸ்மேன் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் 6 பந்துகள் 6 சிக்ஸர்கள் அடித்த ஒரே வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மென் என்ற சரித்திரத்தை படைத்துள்ளார்.

5. 135 சிக்சர்கள் அடித்துள்ள அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்சர் அடித்த 2-வது வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன் என்ற பெருமை பெற்றுள்ளார். முதலிடத்தில் கிறிஸ் கெயில் 330 சிக்ஸர்களுடன் உள்ளார்.

6. அதேபோல் டி20 கிரிக்கெட்டில் 99 சிக்ஸர்கள் அடித்துள்ள அவர் சர்வதேச டி20 போட்டிகளில் பவுண்டரிகளை விட அதிக ரசிகர்கள் அடித்த 2-வது பேட்ஸ்மேன் என்ற சாதனை படைத்துள்ளார். 99 சிக்ஸர்களை அடித்துள்ள அவர் 94 பவுண்டரிகள் மட்டுமே அடித்துள்ளார். மற்றொரு வெஸ்ட் இண்டீஸ் வீரர் எவின் லெவிஸ் 106 பவுண்டரிகளும் 110 சிக்ஸர்களும் அடித்து முதலிடத்தில் உள்ளார். மேலும் 99 சிக்ஸர்கள் அடித்து உள்ள அவர் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்த 3-வது வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற பெருமையும் பெற்றுள்ளார்.

Advertisement