- Advertisement -
இந்திய கிரிக்கெட்

திலக் வர்மாவை விரும்பிய கம்பீர்.. கடைசியில் சொதப்பலான ரியான் பராக் இலங்கை தொடரில் தேர்வானது எப்படி?

இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. அந்தத் தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் ஓய்வு பெற்ற ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புதிய பயிற்சியாளர் கௌதம் கம்பீர் புதிய கேப்டனாக சூரியகுமார் யாதவை தேர்ந்தெடுத்துள்ளார்.

குறிப்பாக ஹர்திக் பாண்டியா ஃபிட்னஸ் இல்லாததால் இந்தியா பங்கேற்கும் அனைத்து தொடர்களிலும் விளையாடுவதில்லை என்று அவர் கருதுகிறார். எனவே அவரிடமிருந்த துணை கேப்டன்ஷிப் பதவியையும் பறித்துள்ள கௌதம் கம்பீர் புதிய துணை கேப்டனாக சுப்மன் கில்லை தேர்ந்தெடுத்தது ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதை விட அபிஷேக் ஷர்மா, ருதுராஜ் ஆகியோர் இலங்கைத் தொடரில் கழற்றி விடப்பட்டது ரசிகர்களிடம் கோபத்தை ஏற்படுத்தியது.

- Advertisement -

காயத்தால் வாய்ப்பு:
ஏனெனில் சுப்மன் கில்லை விட சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அதே போல சமீபத்திய ஜிம்பாப்வே டி20 தொடரில் அறிமுகமாகி சதமடித்த அபிஷேக் ஷர்மா இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். ஆனால் அவரை கழற்றி விட்ட தேர்வுக்குழு அதே ஜிம்பாப்வே தொடரில் அறிமுகமாகி 24 ரன்கள் மட்டுமே எடுத்து சொதப்பிய ரியான் பராக்கை இலங்கை டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் தேர்ந்தெடுத்துள்ளது.

இத்தனைக்கும் 2024 டி20 உலகக் கோப்பையில் தமக்கு வாய்ப்பு கிடைக்காததால் இந்தியா என்றால் என்ன? தோற்றால் என்ன? அதைப் பார்க்கப் போவதில்லை என்று ரியான் பராக் பேசியிருந்தார். அப்படி நாட்டுப்பற்று இல்லாமல் பேசிய அவருக்கு இலங்கை தொடரில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது ரசிகர்களிடம் கோபத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் இலங்கைத் தொடரில் மிடில் ஆர்டரில் ஆல் ரவுண்டராக செயல்படக்கூடிய திலக் வர்மாவை தேர்ந்தெடுக்க கௌதம் கம்பீர் விரும்பியதாக தெரிகிறது.

- Advertisement -

குறிப்பாக மும்பை ஐபிஎல் அணியில் அசத்திய திலக் வர்மா இந்தியாவுக்காகவும் அறிமுகமாகி டி20 கிரிக்கெட்டில் ஆல் ரவுண்டராக அசத்தத் துவங்கினர். ஆனால் 2024 ஐபிஎல் தொடரில் அவர் காயமடைந்ததால் கிட்டத்தட்ட அதே போல செயல்படக்கூடிய ரியான் பராக் தேர்வானதாக செய்தி வெளியாகியுள்ளது. இது பற்றி டைம்ஸ் ஆஃப் இந்தியா இணையத்தில் கூறப்பட்டுள்ளது பின்வருமாறு.

இதையும் படிங்க: கடமையை செய்ங்க.. பாகிஸ்தான் கொடுக்கும் நல்ல வாய்ப்பை இந்தியா மிஸ் பண்ணக்கூடாது.. சோயப் மாலிக் ஓப்பன்டாக்

“மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் திலக் வர்மா தற்போது காயமடைந்துள்ளது இலங்கை தொடரில் ரியான் பராக் தேர்வாக உதவியது. சமீப காலங்களில் ரியான் பராக் முன்னேற்றங்களை காண்பித்துள்ளார். களத்தில் நீண்ட நேரம் நின்று விளையாடப் பார்க்கும் அவர் கணிசமாக பந்து வீசக் கூடியவர். ஃபீல்டிங்கிலும் அசத்தும் அவரை தேர்வாளர்கள் வாய்ப்பு கொடுத்து வளர்க்க விரும்புகின்றனர்” என்று கூறப்பட்டுள்ளது.

- Advertisement -