வெ.இ வாரியத்தின் அலட்சியத்தால்.. முரளிதரனின் உலக சாதனையை உடைக்கும் வாய்ப்பை தவற விட்ட அஸ்வின்

- Advertisement -

இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதின. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற்ற அத்தொடரின் முதல் போட்டியில் 280 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. அப்போட்டியில் வெற்றி பெற ரவிச்சந்திரன் அஸ்வின் சதமடித்து 6 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

அதைத் தொடர்ந்து கான்பூரில் நடைபெற்ற 2வது போட்டியில் வங்கதேசத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. மழையால் 2 நாட்கள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டதால் டிராவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட அப்போட்டியில் கடைசி 2 நாட்களில் அதிரடியாக விளையாடி இந்தியா வென்றது. அந்த 2 போட்டிகளில் மொத்தமாக ரவிச்சந்திரன் அஸ்வின் 114 ரன்கள் மற்றும் 11 விக்கெட்டுகள் எடுத்து ஆல் ரவுண்டராக வெற்றியில் பங்காற்றினார்.

- Advertisement -

தவறிய சாதனை:

அதனால் தொடர்நாயகன் விருதை வென்ற அஸ்வின் தம்முடைய கேரியரில் மொத்தம் 11 தொடர்நாயகன் விருதுகளை வென்றுள்ளார். அதன் காரணமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக தொடர்நாயகன் விருதுகள் வென்ற வீரர் என்ற ஜாம்பவான் முத்தையா முரளிதரனின் சாதனையையும் அஸ்வின் சமன் செய்திருந்தார். சொல்லப்போனால் முரளிதரன் 60 தொடர்களில் வென்ற 11 விருதுகளை அஸ்வின் வெறும் 39 தொடர்களிலேயே வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

முன்னதாக கடந்த 2023 ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 1 – 0 (2) என்ற கணக்கில் இந்தியா வென்றது. அந்தத் தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்ற பவுலர்களை காட்டிலும் அதிகபட்சமாக 15 விக்கெட்டுகளையும் 56 ரன்களும் எடுத்திருந்தார். அதனால் அத்தொடரின் தொடர் நாயகனாக ரவிச்சந்திரன் நாயகன் அஸ்வின் அறிவிக்கப்பட்டிருந்தார்.

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அலட்சியம்:

இருப்பினும் போர்ட் ஆஃப் ஸ்பெயின் மைதானத்தில் நடைபெற்ற 2வது போட்டியின் முடிவில் விருதுகள் வழங்கும் விழாவில் அவருக்கு அந்த விருது கொடுக்கப்படவில்லை. அந்த விருதை வழங்க ஒரு இந்திய தனியார் ஸ்பான்ஷர்ஷிப் நிறுவனத்தை வெஸ்ட் இண்டீஸ் வாரியம் ஒப்பந்தம் செய்திருந்தது. ஆனால் அந்த நிறுவனம் வணிக ரீதியான விஷயங்களுக்கு மட்டுமே ஸ்பான்சர்ஷிப் செய்ததாக வெஸ்ட் இண்டீஸ் வாரியத்திடம் கடைசி நேரத்தில் கையை விரித்துள்ளது. சாதனை விருதுகள் நீங்கள் கொடுக்க வேண்டியது என்று அந்த நிறுவனம் சொல்லி விட்டதாகவும் தெரிகிறது.

இதையும் படிங்க: ரோஹித் சர்மா சுயநலமின்றி இப்போ டெஸ்ட் அணியிலும் இதை செஞ்சுருக்காரு.. சஞ்சய் மஞ்ரேக்கர் பாராட்டு

அதனால் வெஸ்ட் இண்டீஸ் வாரியம் இதுவரை அஸ்வினுக்கு அந்த தொடர்நாயகன் விருதை வழங்கவில்லை என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையத்தில் தெரிவிக்கிறது. ஒருவேளை அந்த விருது கொடுக்கப்பட்டிருந்தால் இந்நேரம் அஸ்வின் 12 விருதுகளுடன் முரளிதரனை முந்தி உலக சாதனை படைத்திருப்பார். அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் வாரியத்தின் அலட்சியத்தால் ரவிச்சந்திரன் அஸ்வின் உலக சாதனையை தற்காலிகமாக தவற விட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement