பாகிஸ்தானின் கனவு இந்தியாவின் கையில்.. சூப்பர் 8 சுற்றுக்கு செல்வதற்கு செய்ய வேண்டிய உதவி என்ன

IND vs PAK 3
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மிகவும் திண்டாட்டமாக செயல்பட்டு வருவது அந்நாட்டு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏனெனில் முதல் போட்டியிலேயே கத்துக்குட்டியாக கருதப்படும் அமெரிக்காவிடம் சூப்பர் ஓவரில் பாகிஸ்தான் தோற்றது. அதனால் முதல் முறையாக ஒரு உறுப்பு நாட்டு அணியிடம் டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அவமானத் தோல்வியை பதிவு செய்தது.

அந்த நிலையில் ஜூன் ஒன்பதாம் தேதி நடைபெற்ற 2வது போட்டியில் பந்து வீச்சில் அசத்திய பாகிஸ்தான் வரலாற்றில் முதல் முறையாக இந்தியாவை 119 ரன்களுக்கு சுருட்டி ஆல் அவுட்டாக்கியது. அதனால் கண்டிப்பாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட அந்த அணி பேட்டிங்கில் சொதப்பி 20 ஓவரில் 113/7 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன் காரணமாக மீண்டும் பரம எதிரியான இந்தியாவிடம் அந்த அணி அவமானத் தோல்வியை பதிவு செய்தது.

- Advertisement -

இந்தியாவில் கையில்:
அப்படி அடுத்தடுத்து அவமான தோல்விகளை பதிவு செய்த பாகிஸ்தான் குரூப் ஏ புள்ளிப்பட்டியலில் தற்போது 4வது இடத்தில் இருக்கிறது. அதனால் சூப்பர் 8 சுற்றுக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை பாகிஸ்தான் இழந்துள்ளது. தற்போதைய நிலைமையில் ஏ புள்ளிப்பட்டியலில் இந்தியா அதிக ரன்ரேட் காரணமாக 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது.

அதைத்தொடர்ந்து கொஞ்சம் குறைந்த ரன்ரேட் கொண்ட அமெரிக்கா 4 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருக்கிறது. 3வது இடத்தில் 2 புள்ளிகளுடன் கனடா உள்ளது. 4, 5வது இடங்களில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் இருக்கின்றன. இந்த பிரிவிலிருந்து லீக் சுற்றின் முடிவில் டாப் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் மட்டுமே சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும். எனவே அந்த வாய்ப்பை பாகிஸ்தான் பெறுவதற்கு முதலில் கனடா மற்றும் அயர்லாந்துக்கு எதிரான தங்களுடைய கடைசி 2 போட்டிகளில் வெல்ல வேண்டும்.

- Advertisement -

அத்துடன் தற்போது 2, 3வது இடங்களில் உள்ள அமெரிக்கா மற்றும் கனடா அணிகளை இந்தியா தோற்கடிக்க வேண்டும். அதே போல அமெரிக்கா மற்றும் கனடா அணிகள் அதனுடைய கடைசி போட்டியில் வெல்லக் கூடாது. மேலும் அயர்லாந்து அணி அதனுடைய கடைசி 2 போட்டிகளில் 1 வெற்றி மட்டுமே பெற வேண்டும். மேற்கூறிய அம்சங்கள் நடைபெற்றால் பாகிஸ்தான் அணி 4 புள்ளிகளை பெறும்.

இதையும் படிங்க: இந்தியா அதுல சூப்பர்.. தட்டில் வெச்சு வெற்றியை கொடுத்தும் பாகிஸ்தான் சொதிப்பிட்டாங்க.. வகார் யூனிஸ்

அந்த சூழ்நிலையில் அமெரிக்கா மற்றும் பாகிஸ்தானின் புள்ளிகள் சமமாக (4) இருக்கும் என்பதால் ரன்ரேட் முக்கிய பங்காற்றும். எனவே கனடா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு எதிரான தங்களுடைய கடைசி 2 போட்டிகளில் பாகிஸ்தான் பெரிய வெற்றிகளை பெற்று ரன் ரேட்டை அதிகரிப்பது அவசியம். மொத்தத்தில் பாகிஸ்தானின் சூப்பர் 8 வாய்ப்பு பாதிக்கும் மேல் இந்தியாவின் கையில் இருக்கிறது.

Advertisement