
ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவை 21 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து ஆப்கானிஸ்தான் புதிய வரலாறு படைத்தது. செயின்ட் வின்செட் நகரில் ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 149 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ரகமனுல்லா குர்பாஸ் 60, இப்ராஹிம் ஜாட்ரான் 51 ரன்கள் எடுத்தனர்.
ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக பட் கமின்ஸ் 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத் தொடர்ந்து சேசிங் செய்த ஆஸ்திரேலியா சுமாராக விளையாடி 127 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி அவமான தோல்வியில் பதிவு செய்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக கிளன் மேக்ஸ்வெல் 59 ரன்கள் எடுத்த நிலையில் ஆப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக குல்பதின் நைப் 4 விக்கெட்டுகள் சாய்த்தார்.
செமி ஃபைனல் வாய்ப்பு:
இந்த நிலையில் சூப்பர் 8 குரூப் 2 பிரிவிலிருந்து செமி ஃபைனல் செல்வதற்கு இந்தியா 96.6%, ஆஸ்திரேலியா 57.3%, ஆப்கானிஸ்தான் 37.5% வாய்ப்பை வைத்துள்ளன. தற்போதைய நிலைமையில் 2 போட்டிகளில் 2 வெற்றிகளை பெற்ற இந்தியா புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து செமி ஃபைனல் வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது. ஆனால் ஆப்கானிஸ்தானிடம் தோல்வியை சந்தித்ததால் ஆஸ்திரேலியா நாக் அவுட்டாகும் தருவாயில் உள்ளது.
ஆம் அந்த அணி செமி ஃபைனல் செல்வதற்கு நாளைய போட்டியில் இந்தியாவை தோற்கடிக்க வேண்டும். இருப்பினும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக் கோப்பை ஃபைனலில் இந்தியாவை தோற்கடித்த ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது. எனவே ஆஸ்திரேலியா மீது கருணை காட்டாமல் தோற்கடித்து வெளியேற்ற வேண்டும் என்பதே இந்திய ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது. அதற்கு நாளைய போட்டியில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்தாலே இத்தொடரிலிருந்து இந்தியா வீட்டுக்கு அனுப்பி வைக்கும்.
அதே போல ஆஸ்திரேலியாவை இந்தியா தோற்கடித்து வங்கதேசத்தை தங்களுடைய கடைசிப் போட்டியில் வீழ்த்தினால் ஆப்கானிஸ்தான் செமி ஃபைனலுக்கு தகுதி பெறும். அதே சமயம் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோற்றாலும் செமி ஃபைனல் செல்ல வாய்ப்புள்ளது. ஏனெனில் ஆஸ்திரேலியா (+0.222), ஆப்கானிஸ்தான் (-0.650) விட இந்தியாவின் (+2.425) ரன்ரேட் அதிகமாகவே உள்ளது. ஆனால் ஒருவேளை ஆஸ்திரேலியாவிடம் பெரிய தோல்வியை சந்தித்து ஆப்கானிஸ்தான் அதனுடைய கடைசிப் போட்டியில் வங்கதேசத்திடம் பெரிய வெற்றியைப் பெற்றால் இந்தியா நாக் அவுட் செய்யப்படுவதற்கான ஆப்பும் காத்திருக்கிறது.
இதையும் படிங்க: ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றியால் ஆஸ்திரேலிய அணிக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் – அரையிறுதி வாய்ப்பு கஷ்டம்
அது போன்ற சூழ்நிலையில் இந்தியா ஃசெமி பைனல் செல்ல வங்கதேசம் தங்களுடைய கடைசி போட்டியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்த வேண்டும். எனவே ஆசிய கண்டத்தில் தற்சமயத்தில் டாப் 2 கிரிக்கெட் அணிகளாக திகழும் இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் சிவனும் சக்தியமாக சேர்ந்து தங்களது கடைசி போட்டியில் வென்று ஆஸ்திரேலியாவை நாக் அவுட் செய்யுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது.