ஆசிய கோப்பையில் 1 அல்ல, 15 நாட்களில் 3 போட்டிகளில் மோதப்போகும் இந்தியா – பாகிஸ்தான், எப்படினு பாருங்க

Advertisement

சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து போல ஆசியாவைச் சேர்ந்த மிகப் பெரிய பரம எதிரிகள் என்றால் அது இந்தியா – பாகிஸ்தான் ஆகும். மேலும் சமீப காலங்களில் இவ்விரு நாடுகளுக்கிடையே நிலவும் எல்லைப் பிரச்சினைகள் காரணமாக நேருக்கு நேர் இருதரப்பு தொடர்களில் மோதுவதை முற்றிலுமாக நிறுத்திவிட்டன. கடைசியாக கடந்த 2012இல் மோதிய இவ்விரு அணிகளும் கடந்த 10 வருடங்களாக இருதரப்பு தொடர்களில் மோதுவதை தவிர்த்து வரும் நிலையில் ஐசிசி நடத்தும் உலக கோப்பை மற்றும் ஆசிய கோப்பை தொடர்களில் மட்டுமே மோதி வருகின்றன.

Shoaib-Akhtar-Sachin-Tendulkar
Shoaib-Akhtar-Sachin-Tendulkar

அதனால் ஏற்கனவே கிரிக்கெட்டை வெறும் விளையாட்டாக பார்க்காமல் கௌரவமாக பார்க்கும் இவ்விரு நாடுகளும் அதில் வெற்றி பெறுவதற்காக முழுமூச்சுடன் ஆக்ரோசமாக மோதிக் கொள்வார்கள் என்ற நிலைமையில் அதை எல்லைப் பிரச்சனை காரணமாக அடிக்கடி பார்க்க முடியாத நிலைமை ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக சமீபத்திய காலங்களில் வருடத்திற்கு ஒருமுறை அல்லது 2 வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே இவ்விரு அணிகள் மோதுவதால் அந்த போட்டிகளுக்கு முன்பைவிட உலக அளவில் மவுசு எகிறியுள்ளது.

ஆசிய கோப்பை 2022:
கடைசியாக கடந்த 2021இல் துபாயில் நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பை லீக் போட்டியில் இவ்விரு அணிகளும் மோதிய போது பந்து வீச்சிலும் பேட்டிங்கிலும் அட்டகாசமாக செயல்பட்ட பாகிஸ்தான் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்தியாவை உலக கோப்பையில் மண்ணைக் கவ்வ வைத்து வரலாற்றை மாற்றி எழுதியது. அதனால் அவமானத்தை சந்தித்தாலும் தங்களை தோற்கடிக்க பரம எதிரிக்கு இத்தனை வருடங்கள் தேவைப்பட்டதே என்பதை நினைத்து பெருமைப்படும் அணியாகவே இந்தியா திகழ்கிறது. இந்த நிலைமையில் அடுத்ததாக இவ்விரு அணிகளும் வரும் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை நடைபெறும் ஆசிய கோப்பையில் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

- Advertisement -

INDvsPAK

வரலாற்றில் 15-வது முறையாக நடைபெறும் இந்த ஆசிய கோப்பையில் ஏற்கனவே 7 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் இந்தியா கடைசியாக கடந்த 2018இல் இதே துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பையில் வங்கதேசத்தை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது. எனவே இம்முறையும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்றல்ல 3:
இந்த தொடரில் பங்கேற்கும் 6 அணிகளும் குரூப் ஏ மற்றும் பி என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அறிவிக்கப்பட்டுள்ள அட்டவணையின் படி குரூப் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்தியாவும் பாகிஸ்தானும் வரும் ஆகஸ்ட் 28இல் தங்களது முதல் லீக் போட்டியில் பலப்பரீட்சை நடத்த உள்ளன. அந்த வகையில் அந்த ஒரு போட்டியில் மட்டுமே இந்தியாவும் பாகிஸ்தானும் மோத உள்ளது என்பதே பெரும்பாலான ரசிகர்களுக்கு தெரியும். ஆனால் இதே தொடரில் 15 நாட்களுக்குள் இவ்விரு அணிகளும் மேலும் 2 முறை மோதுதற்கு உண்டான சாத்தியக் கூறுகளைப் பற்றி பார்ப்போம்:

- Advertisement -

1. முதலில் லீக் சுற்றில் ஒரு பிரிவில் 3 அணிகள் இடம் பிடித்துள்ள நிலையில் அதில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றான சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற உள்ளது. அந்த வகையில் குரூப் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்தியா, பாகிஸ்தான் மற்றும் குவாலிபயர் சுற்றில் வென்று வரும் அணி இடம்பிடித்துள்ளது.

2. அந்த 3-வது அணி அமீரகம் அல்லது குவைத் அல்லது ஹாங்காங் அல்லது சிங்கப்பூர் ஆகிய அணிகளில் ஏதேனும் ஒன்றாக இருக்கப் போகிறது. எனவே அந்த கத்துக்குட்டி அணியை நிச்சயமாக இந்த 2 அணிகளும் தோற்கடித்து லீக் சுற்றில் முதல் 2 இடங்களைப் பிடித்து சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்புகளே 99% உள்ளது.

- Advertisement -

3. அந்த வகையில் அடுத்ததாக நடைபெறும் சூப்பர் 4 சுற்றுக்காக அறிவிக்கப்பட்டுள்ள அட்டவணையின் படி செப்டம்பர் 4இல் நடைபெறும் போட்டியில் குரூப் ஏ பிரிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகளான ஏ1 அணியும் ஏ2 அணியும் மோதும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

4. அதன்படி இந்தியாவும் பாகிஸ்தானும் மீண்டும் அந்த போட்டியில் 2-வது முறையாக மோதுவதற்கு 99% வாய்ப்புகள் உள்ளது.

- Advertisement -

INDvsPAK

5. அதுபோக இந்த தொடரில் இவ்விரு அணிகளை தவிர இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் போன்ற எஞ்சிய அணிகள் அனைத்துமே பலவீனமான அணிகள் என்று அனைவரும் அறிவோம். மேலும் இந்தியாவும் பாகிஸ்தானும் அந்த அணிகளை விட பலமான அணிகளாகும்.

இதையும் படிங்க:  IND vs WI : வெஸ்ட் இண்டீஸில் ஒன்றிணைந்த பொல்லார்ட் – பாண்டியா நண்பர்கள், வைரல் படத்தின் விவரம் இதோ

6. இதில் இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் போன்ற அணிகள் இந்தியா அல்லது பாகிஸ்தானை தோற்கடித்து ஃபைனல் வருவதற்கு 30 – 50% மட்டுமே வாய்ப்புள்ளது. எனவே சூப்பர் 4 சுற்றில் எஞ்சிய அனைத்து அணிகளையும் தோற்கடித்து இந்தியாவும் பாகிஸ்தானும் வரும் செப்டம்பர் 11இல் நடைபெறும் ஆசிய கோப்பை மாபெரும் இறுதி போட்டியில் 3-வது முறையாக மோதுவதற்கு தகுதி பெறும் என்று உறுதியாக கூறலாம்.

Advertisement