IND vs WI : வெஸ்ட் இண்டீஸில் ஒன்றிணைந்த பொல்லார்ட் – பாண்டியா நண்பர்கள், வைரல் படத்தின் விவரம் இதோ

Pandya-2
- Advertisement -

வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அங்கு அந்த அணிக்கு எதிராக பங்கேற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 3 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. முன்னதாக இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்களுடன் களமிறங்கிய இந்தியா வரலாற்றிலேயே முதல் முறையாக வெஸ்ட் இண்டீசை அதன் சொந்த மண்ணில் வைட்வாஷ் செய்து சாதனை படைத்தது. கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இல்லாத நிலையிலும் சாதித்த இந்திய அணிக்கு இந்த டி20 தொடரில் தினேஷ் கார்த்திக், புவனேஸ்வர் குமார் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இணைந்து மேலும் பலத்தை சேர்த்து வருகிறார்கள்.

அந்த வரிசையில் ஐபிஎல் 2022 கோப்பையை வென்று இந்திய அணிக்குள் கம்பேக் கொடுத்து அட்டகாசமாக செயல்பட்டு வரும் நம்பிக்கை நட்சத்திரம் ஹர்திக் பாண்டியா இந்த டி20 தொடரில் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி வருகிறார். குறிப்பாக 3-வது போட்டியில் ஒரு விக்கெட் எடுத்த அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 500+ ரன்கள் மற்றும் 50 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற தனித்துவமான சாதனை படைத்தார்.

- Advertisement -

பொல்லார்ட் வீட்டில்:
இந்த நிலைமையில் வெஸ்ட் இண்டீசுக்கு நீண்ட நாட்கள் கழித்து சென்றுள்ள ஹர்திக் பாண்டியா அங்கே இருக்கும் தன்னுடைய நெருங்கிய நண்பர் மற்றும் முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கைரன் பொல்லார்ட் வீட்டிற்கு சென்று அவரை நேரில் பார்த்து மகிழ்ச்சியுடன் நேரங்களை செலவிட்டுள்ளார். ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 2015 முதல் மிகச்சிறந்த ஆல்-ரவுண்டர்களாக விளையாடிய இவர்கள் அந்த அணி தோற்க இருந்த எத்தனையோ போட்டிகளில் கடைசி நேரத்தில் களமிறங்கி அதிரடி சரவெடியாக பேட்டிங் செய்து கிடைக்காது என்று கருதப்பட்ட வெற்றிகளையும் பெற்றுக் கொடுத்தார்கள்.

அதனால் 2015 – 2021 வரையிலான காலகட்டத்தில் 4 கோப்பைகளை மும்பை வெல்வதற்கு மிகச்சிறந்த பினிஷர்களாக முக்கிய பங்காற்றிய இவர்கள் களத்தில் நிறைய தருணங்களில் ஒன்று சேர்ந்து அமைத்த பார்ட்னர்ஷிப்களை அந்த அணியின் ரசிகர்கள் மறக்கவே மாட்டார்கள். அதனால் மனதளவில் நண்பர்களாகவும் சகோதரர்களை போலவும் நல்ல புரிதல்களை கொண்ட இவர்களை பிரிக்கும் வகையில் இந்த வருடம் நடந்த ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியாவை மும்பை அணி நிர்வாகம் தக்கவைக்காமல் கழற்றி விட்டது.

- Advertisement -

சகோதர நண்பர்கள்:
அதனால் மும்பையில் இருந்து பிரிந்து சென்ற ஹர்திக் பாண்டியா இந்த வருடம் தன்னை நம்பி வாங்கிய குஜராத் அணிக்கு 487 ரன்களையும் 8 விக்கெட்டுகளை எடுத்து சிறந்த ஆல்-ரவுண்டராகவும் அனுபவமில்லாத கேப்டன்ஷிப் பொறுப்பில் அசத்தலாக செயல்பட்டு முதல் வருடத்திலேயே கோப்பையை வென்று தன் மீதான விமர்சனங்களை உடைத்தார். மறுபுறம் பாண்டியா இல்லாத குறையை போல் மும்பை அணியில் சுமாராக செயல்பட்ட பொல்லார்ட் கடைசி நேரத்தில் பெஞ்சில் அமர வைக்கப்பட்டார்.

அதனால் அணியை விட்டு பிரிந்தாலும் நட்பு பிரியாது என்பது போல் அடுத்த வருடம் தன்னுடைய குஜராத் அணியில் பொல்லார்ட் விளையாட விரும்புவதாக ஐபிஎல் தொடரின்போது ஹர்திக் பாண்டியா தெரிவித்திருந்தார். அப்படி வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றாலும் நட்புக்கு இலக்கணமாக திகழும் தனது நண்பரை போன்ற சகோதரரான பொல்லார்ட் வீட்டுக்கு நேரில் சென்ற ஹர்திக் பாண்டியா அவரது மனைவி குழந்தைகளுடன் பேசி மகிழ்ந்தார்.

- Advertisement -

இது பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளது பின்வருமாறு. “கரீபியனுக்கு செல்லும் எந்தப் பயணமும் இந்த கிங் வீட்டுக்கு செல்லாமல் முழுமை அடையாது. பொல்லார்ட் எனக்கு மிகவும் பிடித்தவர் மற்றும் அவருடைய குடும்பம் மிகவும் அழகானது, என்னை உங்களுடைய வீட்டுக்கு அழைத்ததற்கு மிகவும் நன்றி என்னுடைய பொல்லார்ட் சகோதரரே” என்று புகைப்படத்தோடு வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க : அவருக்காக தான் தினேஷ் கார்த்திக்கை செலக்ட் பண்ணல – தோனியின் முடிவினை பற்றி பகிர்ந்த பயிற்சியாளர்

அதை பார்த்த மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகிறார்கள். பொல்லார்ட் குடும்பத்தை பார்த்த மகிழ்ச்சியுடன் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி 2 போட்டிகளில் பங்கேற்பதற்காக அந்த போட்டிகள் நடைபெறும் அமெரிக்காவின் ப்ளோரிடா நகருக்கு சென்றுள்ள ஹர்டிக் பாண்டியா பயிற்சி எடுக்க துவங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement