ஸ்டம்ப்பில் பந்து பட்டும் அவுட்டிலிருந்து சுப்மன் கில்லை காப்பாற்றிய 3 மீட்டர் – ரூல், ரசிகர்கள் அறியாத விவரம் இதோ

LBW Gill
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதலிரண்டு போட்டிகளில் வென்றாலும் 3வது போட்டியில் தோற்ற இந்தியா 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெற மார்ச் 9ஆம் தேதியன்று அகமதாபாத் நகரில் துவங்கிய கடைசி வென்றாக வேண்டிய கட்டாயத்தில் விளையாடி வருகிறது. மறுபுறம் ஏற்கனவே ஃபைனலுக்கு தகுதி பெற்று விட்ட ஆஸ்திரேலியா அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து பிளாட்டான பிட்ச்சில் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி முதல் இன்னிங்ஸில் 480 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா சதமடித்து 180 ரன்களும் கேமரூன் கிரீன் சதமடித்து 114 ரன்களும் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஸ்வின் 6 விக்கெட்டுகள் சாய்ந்தார். அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா உங்களுக்கு நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்ற வகையில் பிளாட்டான பிட்ச்சில் ஆஸ்திரேலிய பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்டு 3வது நாள் முடிவில் 289/3 ரன்கள் குவித்துள்ளது. இந்தியாவுக்கு ரோஹித் சர்மா 35, புஜாரா 42, சுப்மன் கில் 128 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நல்ல ரன்களை எடுத்த நிலையில் களத்தில் விராட் கோலி 59*, ரவீந்திர ஜடேஜா 16* ரன்களுடன் விளையாடி வருகிறார்கள்.

- Advertisement -

3 மீட்டர் ரூல்:
முன்னதாக இந்த போட்டியில் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து சதமடித்த சுப்மன் கில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 வகையான கிரிக்கெட்டிலும் ஒரே காலண்டர் வருடத்தில் சதமடித்த முதல் இந்திய தொடக்க வீரர் என்ற சிறப்பான சாதனை படைத்தார். இருப்பினும் 35 ரன்களில் இருந்த போது நேதன் லயன் வீசிய 18வது ஓவரின் 3வது பந்தை எதிர்கொண்ட அவர் அடிக்காமல் காலில் வாங்கியதால் ஆஸ்திரேலியா எல்பிடபிள்யூ முறையில் அவுட் கேட்டது. ஆனால் களத்தில் இருந்த நடுவர் ரிச்சர்ட் கெட்டல்ப்ரோக் அந்த பந்து அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் லைனுக்கு வெளியே பிட்ச் ஆனதாலும் லெக் ஸ்டம்ப்பில் படாமல் விலகி சென்றிருக்கும் என்ற கோட்பாட்டுடன் அவுட் கொடுக்க மறுத்து விட்டார்.

இருப்பினும் அதில் திருப்தியடையாத ஆஸ்திரேலியா உடனடியாக ரிவியூ எடுத்தது. அப்போது அதை சோதித்த 3வது நடுவர் ஜெயராமன் மதன்கோபால் பந்து ஸ்டம்ப்பில் பட்டும் “3 மீட்டர்” விதிமுறையால் அவுட் கொடுக்காமல் மீண்டும் நாட் அவுட் என்று அறிவித்தது ஸ்டீவ் ஸ்மித், நேதன் லயன் ஆகியோரை அதிருப்தியடைய வைத்தது. சொல்லப்போனால் ஸ்டம்ப்பில் பந்து பட்டும் நடுவர்கள் அவுட் கொடுக்காதது ஏன் என்று நிறைய ரசிகர்களும் குழப்பமடைந்தனர்.

- Advertisement -

ஆனால் க்ரீஸ் விட்டு சில அடிகள் இறங்கி வந்து அந்த பந்தை சுப்மன் கில் எதிர்கொண்டார். அப்போது அவருடைய காலில் பட்ட புள்ளிக்கும் அதிலிருந்து பந்து கற்பனையாக பயணித்து ஸ்டம்ப்களை தாக்கிய புள்ளிக்கும் இடைப்பட்ட தூரம் 3 மீட்டர்களுக்கு மேல் இருந்தது. அங்கே ஏற்கனவே சுப்மன் கில் இறங்கி அடிக்க முயற்சித்த நிலையில் அவரது காலில் பட்ட இடத்திலிருந்து பந்து 3 மீட்டர் எனப்படும் அதிகப்படியான தூரத்தை கற்பனையாக வரையறுக்கப்பட்ட கோணத்தில் சரியாக பயணித்து லெக் ஸ்டம்பில் அடிக்கும் என்று உறுதியாக சொல்ல முடியாது.

அதனால் ஏற்கனவே களத்தில் இருந்த நடுவர் “அதிகமாக விலகி சென்று லெக் ஸ்டம்ப்பில் பட்டிருக்காது” என்ற எண்ணத்துடன் அவுட் கொடுக்க மறுத்த சந்தேகத்தின் பலனை பேட்ஸ்மேனுக்கு சாதகமாக மாற்றிய 3வது நடுவரும் அதே தீர்ப்பை மீண்டும் வழங்கினார். பொதுவாக க்ரீஸ் விட்டு பேட்ஸ்மேன்கள் வெளியே வந்து காலில் வாங்கும் போது அந்த புள்ளிக்கும் ஸ்டம்ப்களுக்கும் இடையே 1.5 மீட்டருக்கு மேல் இடைவெளி இருக்கும் பட்சத்தில் நடுவர்கள் அவுட் கொடுக்க மாட்டார்கள்.

இதையும் படிங்க: சஞ்சு சாம்சனுக்கு சான்ஸ் கொடுத்துட்டா மட்டும் உ.கோ ஜெயிச்சுட முடியுமா? வேஸ்ட் தான் – முன்னாள் வீரர் விமர்சனம்

இங்கே 3 மீட்டர் இருந்ததால் ஸ்டம்ப்பில் பட்டும் அதிகமாக விலகி சென்றிருக்கும் என்று களத்தில் இருந்த நடுவர் ரிச்சர்ட் கெட்டல்ப்ரோக் அவுட் கொடுக்கவில்லை. அதை பயன்படுத்தி சுப்மன் கில் சதமடித்து அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement