- Advertisement -
உலக கிரிக்கெட்

தெ.ஆ ஜெய்ச்சா தோத்தா எனக்கென்ன? 2027 உ.கோ முன் 33 வயதில் ஓய்வாக அவர் தான் காரணம்.. க்ளாஸென் ஓப்பன்டாக்

தென்னாப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர் ஹென்றிச் க்ளாஸென் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக அறிவித்தது அனைவருக்கும் ஆச்சரியமாகவும் ஏமாற்றமாகவும் அமைந்தது. ஏனெனிக் நவீன வெள்ளைப்பந்து கிரிக்கெட் தரமான பேட்ஸ்மேன்களில் ஒருவராக அறியப்படும் அவர் அதிரடியாக விளையாடும் ஸ்டைலைக் கொண்டிருந்தார். 2023 உலகக் கோப்பையில் மும்பையில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்தை வெளுத்து வாங்கிய அவர் சதத்தை அடித்ததை மறக்க முடியாது.

மேலும் ஐபிஎல் தொடரில் சமீப வருடங்களாகவே ஹென்றிச் க்ளாஸென் அதிரடியாக விளையாடிய ரசிகர்களை மகிழ்வித்தார். அதனால் அவருக்கு இந்தியா உட்பட பல நாடுகளிலும் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். அதனால் தொடர்ந்து விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் 33 வயதில் ஓய்வை அறிவித்தது பலருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்தது.

- Advertisement -

தோத்தா எனக்கென்ன:

இத்தனைக்கும் இன்னும் ஒரு வருடத்தில் தங்களுடைய சொந்த நாடான தென்னாப்பிரிக்காவில் 2027 உலகக் கோப்பை நடைபெற உள்ளது. எனவே அவருக்கு அத்தொடரில் விளையாடி சொந்த மண்ணில் கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பு இருந்தது. ஆனால் அதற்கு முன்பாக ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற அவர் இனிமேல் ஐபிஎல் போன்ற டி20 தொடரில் மட்டும் விளையாட முடிவெடுத்துள்ளார்.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா வென்றாலும் தோற்றாலும் அதைப்பற்றி தாம் கவலைப்படவில்லை என்று க்ளாஸென் தெரிவித்துள்ளார். மேலும் ஓய்வு பெறலாம் என்ற முடிவை நீண்ட காலம் மனதிற்குள் வைத்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். அந்த சூழ்நிலையில் தமக்கு ஆதரவாக இருந்த தென்னாபிரிக்க அணியின் பயிற்சியாளர் ராப் வால்டர் சமீபத்தில் அப்பொறுப்பிலிருந்து விலகியதால் ஓய்வை அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

க்ளாஸென் வெளிப்படை:

இது பற்றி க்ளாஸென் பேசியது பின்வருமாறு. “உண்மையில் நீண்ட காலமாக என்னுடைய செயல்பாடுகள் மற்றும் அணி வெற்றி பெற்றதா இல்லையா என்பது பற்றி நான் கவலைப்படாத உணர்வை கொண்டிருந்தேன். அப்படிப்பட்ட உணர்வுடன் இருப்பது தவறான இடமாக இருக்கும். சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்பாக வால்டருடன் பேசினேன். அப்போது இதயத்திலிருந்து என்னால் நல்ல உணர்வுடன் நான் விளையாட முடியவில்லை என்று அவரிடம் சொன்னேன்”

இதையும் படிங்க: கோலியை நெருங்க முடியாத.. ரோஹித் இங்கிலாந்தில் ஆடிருந்தா 30க்கு கிழே போய்ருப்பாரு.. ரோகோவை நிறுத்துங்க.. மஞ்ரேக்கர்

“என்னால் மகிழ்ச்சியுடன் இருக்க முடியவில்லை என்று அவரிடம் சொன்னேன். அந்த வகையில் நன்றாக பேசிய நாங்கள் 2027 உலகக்கோப்பை வரை விளையாடுவது பற்றி திட்டமிட்டு வைத்திருந்தோம். ஆனால் அவர் பயிற்சியாளராக தன்னுடைய வேலையை முடித்ததும் தென்னாப்பிரிக்கா அணியுடன் என்னுடைய ஒப்பந்தம் நன்றாக செல்லவில்லை. அது என்னுடைய ஓய்வு முடிவை அறிவிப்பதற்கான சூழ்நிலைகளை எளிதாக மாற்றியது” என்று கூறினார்.

- Advertisement -