ஐபிஎல்…ஸ்மித்துக்கு பதிலாக களம் இறங்கும் அதிரடி வீரர் – யார் தெரியுமா ? – புகைப்படம் உள்ளே

- Advertisement -

ஐபிஎல் தொடங்க இன்னும் சிலநாட்களே உள்ளன. இந்நிலையில் ஏற்கனவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக தேர்வுசெய்யப்பட்டிருந்த ஆஸ்திரேலிய அணி கேப்டனான ஸ்டீவன் ஸ்மித்திற்கு தென்ஆப்பிரிக்காவில் நடந்து வந்த மூன்றாவது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸின் போது பேன்கிராப்ட் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தொடர்பு இருந்ததால் ஐசிசி அபராதத்துடன் கூடிய தண்டனையையும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஒரு வருட தடையையும் விதித்தது.

heinrich

- Advertisement -

இந்நிலையில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஈடுபட்ட ஸ்மித் மற்றும் வார்னர் இந்த ஐபிஎல்-இல் விளையாட மாட்டார்கள் மேலும் இவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்கள் களமிறக்கப்படுவர் என்று ஐபிஎல் தலைவர் ராஜேஷ் சுக்லா தெரிவித்திருந்தார்.இந்நிலையில் ஏற்கனவே ராஜஸ்தான் அணியின் கேப்டனாக ஸ்மித்திற்கு பதிலாக அந்த அணியின் மற்றொரு வீரரான நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டார்.

ஆனால் ஸ்மித்திற்கு பதிலாக மாற்றுவீரராக வேறு எந்த வீரர் களமிறக்கப்படுவார் என்பது இதுவரையிலும் தெரியாமலே இருந்தது. இன்று அதற்கான விடையை ராஜஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.ஸ்மித்திற்கு இணையான வீரரை வலை போட்டு தேடிக்கொண்டிருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பரான கிளாசனை தேர்வு செய்துள்ளது.

heinrich1

தென்ஆப்பிரிக்க வீரரான கிளாசன் முத்தரப்பு கிரிக்கெட்டின் போது இந்திய சுழற்பந்து வீச்சாளரான சாஹல் பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். சமீபகாலங்களாக சிறப்பாக செயல்பட்டதால் கிளாசனிற்கு ராஜஸ்தான் அணிக்காக விளையாட தற்போது வாய்ப்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக ஹைதராபாத் சன்ரைசர்ஸ் நிர்வாகம் வார்னருக்கு பதிலாக அலெக்ஸ் ஹேல்ஸ்-ஐ சமீபத்தில் தான் தேர்வுசெய்தது.

Advertisement