7 விக்கெட்ஸ்.. பந்தை சேதப்படுத்திய இந்தியா? அம்பயரை ஸ்டுப்பிட் என்று சொன்ன இஷான் கிசான்

- Advertisement -

ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா ஏ கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட பயிற்சி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டி அக்டோபர் 11ம் தேதி மெக்காய் நகரில் துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா ஏ அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா அணி சுமாராக விளையாடி 107 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக தேவ்தூத் படிக்கல் 36 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு அதிகபட்சமாக பிரண்டன் டோகேட் 6 விக்கெட்டுகளை எடுத்தார். பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா ஏ அணி போராடி 195 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் மெக்ஸ்வீனி 39, கூப்பர் கோன்லி 37 ரன்கள் எடுத்தனர்.

- Advertisement -

ஆஸ்திரேலியா வெற்றி:

இந்தியா ஏ அணிக்கு அதிகபட்சமாக பிரசித் கிருஷ்ணா 3, முகேஷ் குமார் 6 விக்கெட்டுகளை எடுத்தனர். அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா ஏ அணி முடிந்தளவுக்கு போராடி இரண்டாவது இன்னிங்ஸில் 312 ரன்கள் குவித்து அசத்தியது. அதிகபட்சமாக தமிழக வீரர் சாய் சுதர்சன் சதமடித்து 103, தேவ்தூத் படிக்கல் 88 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு அதிகபட்சமாக பெர்குஸ் ஓ நெய்ல் 4 விக்கெட்டுகளை எடுத்தார்.

இறுதியில் 225 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியா ஏ அணி மார்கஸ் ஹரிஷ் 36, கேப்டன் மெக்ஸ்வீனி 88*, வெப்ஸ்டேய் 61* ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார்கள். அந்த வகையில் பயிற்சி போட்டியிலேயே ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்தியா ஏ அணி போராடி தோல்வியை சந்திப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

- Advertisement -

நடுவருடன் வாதம்:

முன்னதாக இந்தப் போட்டியில் நான்காவது நாளின் துவக்கத்தில் ஆஸ்திரேலிய அம்பயர்கள் பென் ட்ரெலோர், ஷான் கிரைக் ஆகியோர் பந்தை மாற்றினார்கள். அப்போது பந்தை ஏன் மாற்றுகிறீர்கள் என்று இந்திய அணியினர் கேட்டனர். அதற்கு பந்து சேதமாகி இருப்பது போல் தெரிவதால் அதை மாற்றுவதாக அம்பயர் கிரைக் தெரிவித்தார். குறிப்பாக “மேற்கொண்டு பேசுவதற்கு எதுவும் இல்லை. விளையாடுங்கள்” என்று அவர் சொன்னார்.

இதையும் படிங்க: 329 ரன்ஸ்.. லிவிங்ஸ்டன் மிரட்டல்.. வெ.இ அணியை நொறுக்கிய இங்கிலாந்து.. சாதனை சேசிங்

அதற்கு இந்திய வீரர் இஷான் கிசான் “அப்படியானால் நாங்கள் இந்த பந்தில் தான் விளையாட வேண்டுமா? இது முட்டாள்தனமான முடிவு” என்று சொன்னது ஸ்டம்ப் மைக்கில் பதிவானது. அதற்கு அம்பயர் கிரைக் “மன்னிக்கவும். இது பொருத்தமற்ற நடத்தை. கருத்து வேறுபாட்டிற்காக நீங்கள் புகாரில் இருப்பீர்கள். நீங்கள் பந்தை தெரிவித்ததால் நாங்கள் மாற்றினோம்” என்று சொல்லி அவரை எச்சரித்தார். இதையடுத்து இந்திய அணியினர் பந்தை சேதப்படுத்தவில்லை என்று ஆஸ்திரேலிய வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement