பேசாம அஷ்வினை பாலோ பண்ணிருக்கலாம் – விமர்சனத்துக்கு உள்ளான ஆஸி வீரரை கலாய்க்கும் ரசிகர்கள்

Mitchell Marsh
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் ஏப்ரல் 16-ஆம் தேதி நடைபெற்ற 27-வது லீக் போட்டியில் பெங்களூர் மற்றும் டெல்லி ஆகிய அணிகள் சந்தித்தன. மும்பை வான்கடே மைதானத்தில் மிகுந்த விறுவிறுப்புடன் நடைபெற்று வந்த போட்டியில் வெறும் 16 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை தோற்கடித்த பெங்களூரு இதுவரை பங்கேற்ற 6 போட்டிகளில் 4-வது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் 3-வது இடத்திற்கு முன்னேறியது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 189/5 ரன்கள் எடுத்தது.

Dinesh Karthi 66

- Advertisement -

அந்த அணிக்கு அதிகபட்சமாக 40/3 என தடுமாறியபோது களமிறங்கி அதிரடி காட்டிய நட்சத்திர வீரர் கிளென் மேக்ஸ்வெல் 7 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் உட்பட 55 (34) ரன்கள் விளாசினார். அவருடன் கடைசி நேரத்தில் அதிரடி சரவெடியாக பேட்டிங் செய்த தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் 5 பவுண்டரி மற்றும் 5 சிக்சர்களை பறக்க விட்டு 66* (34) ரன்களை விளாசி அபார பினிசிங் கொடுத்தார். அவருக்கு துணையாக இளம் வீரர் ஷபாஸ் அஹமது 31* ரன்கள் எடுத்தார்.

டெல்லி போராடி தோல்வி:
அதை தொடர்ந்து 190 என்ற இலக்கை துரத்திய டெல்லி எவ்வளவோ போராடிய போதிலும் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 173/7 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. அதன் காரணமாக இதுவரை பங்கேற்ற 6 போட்டிகளில் 4-வது தோல்வியை பதிவு செய்த அந்த அணி புள்ளி பட்டியலில் 8-வது இடத்திற்கு பின்தங்கியது. முன்னதாக அந்தப் போட்டியில் 190 என்ற இலக்கை துரத்திய டெல்லிக்கு தொடக்க வீரர்கள் பிரித்வி ஷா மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் இணைந்து முதல் விக்கெட்டுக்கு அதிரடியாக 50 ரன்கள் குவித்து நல்ல தொடக்கம் கொடுத்தனர்.

DC vs RCB Rishabh Pant

அதில் ப்ரிதிவி ஷா 16 (13) ரன்களில் அவுட்டாக மறுபுறம் அதிரடி காட்டிய டேவிட் வார்னர் 4 பவுண்டரி மற்றும் 5 சிக்சர் உட்பட 66 (38) ரன்களைக் குவித்து தனது வேலையை கச்சிதமாக முடித்து விட்டு சென்றார். ஆனால் பிரிதிவி ஷா அவுட்டானதும் களமிறங்கிய மற்றொரு ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் ஒருசில பந்துகளை சந்தித்த பின் அதிரடியை காட்டாமல் கடைசிவரை மெதுவாகவே விளையாடி 24 பந்துகளில் 1 பவுண்டரி கூட அடிக்காமல் 14 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட்டானது டெல்லியின் தோல்விக்கு மிக மிக முக்கிய பங்காற்றியது.

- Advertisement -

டெல்லியின் வில்லன்:
ஏனெனில் அடுத்து களமிறங்கிய ரோவ்மன் போவல் 0 (1), லலித் யாதவ் 1 (4) என அடுத்தடுத்த அவுட்டாகி அதிர்ச்சி அளித்தாலும் மறுபுறம் அதிரடி காட்டிய கேப்டன் ரிஷப் பண்ட் 17 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் உட்பட 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க கடைசி நேரத்தில் ஷார்துல் தாகூர் 17 (9), அக்சர் பட்டேல் 10* (7), குல்தீப் யாதவ் 10* (7) என போராடி அதிரடியான ரன்களை குவித்த போதிலும் வெறும் 16 ரன்கள் என்ற மிகக்குறைவான ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியின் விளிம்பு வரை வந்த டெல்லி பரிதாபமாக தோற்றது.

இதற்கு 3-வது பேட்டிங் இடம் போன்ற மிக முக்கியமான இடத்தில் களமிறங்கி டெஸ்ட் இன்னிங்ஸ் போல மெதுவாக 24 பந்துகளில் 14 ரன்கள் எடுத்த மிச்செல் மார்ஸ் தான் காரணம் என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அவர்களை கிண்டலடித்து வருகிறார்கள்.

- Advertisement -

அஸ்வினை பாலோ பண்ணிருக்கலாம்:
இது பற்றி நேற்றைய போட்டி முடிந்த பின் தமிழகத்தின் ஜாம்பவான் முன்னாள் வீரர் கிறிஸ் ஸ்ரீகாந்த் பேசியது பின்வருமாறு. “டேவிட் வார்னர் மிகவும் அபாரமாக விளையாடினார். ஆனால் மறுபுறம் மெதுவாக விளையாடிய மிட்செல் மார்ஷ் தான் பின்னடைவை ஏற்படுத்தினார். என்ன மிட்செல் நீங்க, ஒன்று அவுட்டாகி இருக்க வேண்டும் அல்லது ரிட்டையர்ட் அவுட்டாகி சென்றிருக்க வேண்டும். குறிப்பாக அஸ்வின் செய்த செயலை நீங்களும் செய்திருக்க வேண்டும். ஏனெனில் உங்களுக்கு அடுத்து நிறைய பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். அதே சமயம் ரன் ரேட்டும் 13 – 14 எகிறிய நிலையில் ரிஷப் பண்ட் கடுமையாக போராடினார். என்னைக் கேட்டால் மிட்செல் மார்ஷ் தான் இந்த போட்டியின் வில்லனாக அமைந்தார்” என கூறினார்.

இதையும் படிங்க : டெஸ்ட் மேட்ச் ஆடவா இவ்ளோ விலை கொடுத்து வாங்குனீங்க? தொடர்ந்து சொதப்பும் மும்பை வீரர் மீது ரசிகர்கள் கோபம்

அவர் கூறுவது போல இதே போன்றதொரு சூழ்நிலையில் ராஜஸ்தானுக்காக விளையாடிய தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 3-வது இடத்தில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஒரு போட்டியில் தம்மால் அணியின் வெற்றி பாதிக்கக்கூடாது என்பதற்காக சுயநலமில்லாமல் யாரையும் கேட்காமல் எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக ரிட்டயர்ட் அவுட் முறையில் பெவிலியன் திரும்பிய வீரர் என்ற பெயருடன் களத்தில் இருந்து வெளியேறினார். அவரின் அந்த முடிவு இறுதியில் ராஜஸ்தானுக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தது போலவே நேற்றைய போட்டியில் மிட்செல் மார்ஷ் செய்திருந்தால் நிச்சயம் டெல்லி வெற்றி பெற்றிருக்கும் என ஸ்ரீகாந்த் விமர்சித்தார்.

Advertisement