அடுத்த வருஷம் தோனி அந்த முடிவை எடுத்தாதான் சி.எஸ்.கே அணியால தப்பிக்க முடியும் – மேத்யூ ஹைடன்

Hayden
- Advertisement -

இந்தியாவில் கடந்த மார்ச் 26 ஆம் தேதி துவங்கிய ஐபிஎல் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் செயல்பாடு மிகவும் மோசமாக அமைந்ததால் பிளே ஆப் சுற்றில் விளையாடும் வாய்ப்பை இழந்து அதிகாரப்பூர்வமாக இந்த தொடரில் இருந்து சென்னை அணி வெளியேறியுள்ளது. கடைசியாக மும்பை அணிக்கு எதிராக நடைபெற்ற லீக் போட்டியில் 97 ரன்களை மட்டுமே அடித்த சென்னை அணி மும்பை அணியிடம் படு மோசமான தோல்வியை சந்தித்தது.

CSK MS Dhoni Ravindra Jadeja

- Advertisement -

இப்படி இந்த தொடரில் சென்னை அணி சந்தித்த மிகப்பெரிய சரிவிற்கு முக்கிய காரணமாக ஆரம்பத்தில் ஜடேஜா அணியின் கேப்டனாக இருந்தது பாதகமான விடயமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் கேப்டன்சி அனுபவம் வாய்ந்த தோனி அணியில் இருக்கையில் அனுபவமற்ற ஜடேஜாவிற்கு கேப்டன் பதவி சென்றது சென்னை அணியின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது.

இந்நிலையில் தற்போது மீண்டும் சென்னை அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்று விளையாடி வரும் தோனியின் தலைமையில் சற்று சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை அணி அடுத்த ஆண்டு பலமாக திரும்ப வேண்டும் என்பதால் அணியை கட்டமைக்கும் பொறுப்பு தோனியின் கைகளில் தான் உள்ளது. ஆனால் நாற்பது வயதை தொட்ட தோனி எப்போது வேண்டுமானாலும் ஓய்வு அறிவிக்கலாம் என்று கூறப்படுகிறது.

CSK Ms DHoni

இதன் காரணமாக தற்போது சென்னை அணி ஒரு சிக்கலான சூழலில் உள்ளது என்றே கூறலாம். இந்நிலையில் சென்னை அணி அடுத்த ஆண்டு சிக்கல்களில் இருந்து தப்பிக்க வேண்டுமெனில் தோனி ஒரு முக்கிய முடிவை எடுக்க வேண்டும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான மேத்யூ ஹைடன் தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றிருந்தாலும் நடப்பு ஐபிஎல் தொடரில் அட்டகாசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார். அவர் விக்கெட்டுகளுக்கு இடையே ஓடும்போதும் மிக வேகமாக ஓடுகிறார். 40 வயதை தொட்ட ஒரு வீரர் இப்படி இளைஞனைப் போல விளையாடி வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. நிச்சயம் அவர் தொடர்ந்து விளையாட விரும்பினால் அவரால் அதை செய்ய முடியும்.

இதையும் படிங்க : டீமில் இருந்தே ஜடேஜாவை தூக்கியெறிந்ததா சி.எஸ்.கே? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த – டீம் மேனேஜ்மென்ட்

எனவே அடுத்த ஆண்டு தோனி ஓய்வினை அறிவிக்காமல் சென்னை அணிக்காக தொடர்ந்து கேப்டனாக விளையாட வேண்டும். தோனி போன்ற ஒரு மிகப்பெரிய கேப்டன் அணிக்கு நிலைத்தன்மையை கொண்டுவருவார். எனவே அடுத்த ஆண்டு சென்னை அணியை பலப்படுத்த வேண்டுமெனில் தோனி ஓய்வினை அறிவிக்காமல் தொடர்ந்து ஐ.பி.எல் தொடரில் விளையாட வேண்டும் என ஹைடன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement