- Advertisement -
இந்திய கிரிக்கெட்

வீட்ல மனைவி குழந்தைங்க இருக்காங்க பாத்துகோங்க.. சவாலை கொடுத்த ஹோட்ஜ்.. மார்க் வுட் பற்றி கலகலப்பு

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அங்கு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அத்தொடரின் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் இன்னிங்ஸ் தோல்வி சந்தித்தது. அந்த சூழ்நிலையில் நாட்டிங்கம் நகரில் ஜூலை 18ஆம் தேதி துவங்கிய 2வது போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து சிறப்பாக விளையாடி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 416 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஓலி போப் சதமடித்து 121, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 69, பென் டக்கெட் 71 ரன்கள் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக அல்சாரி ஜோசப் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

- Advertisement -

குழந்தைங்க இருக்காங்க:
அதைத் தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் மீண்டும் திணறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இம்முறை இங்கிலாந்துக்கு தக்க பதிலடி கொடுத்து போராடும் அந்த அணி 2வது நாள் முடிவில் 351/5 ரன்கள் எடுத்து சவாலை கொடுத்து வருகிறது. அந்த அணிக்கு கேப்டன் ப்ரத்வெய்ட் 48, லூயிஸ் 21, மெக்கன்சி 11 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

இருப்பினும் மிடில் ஆர்டரில் அபாரமாக விளையாடிய அலிக் அதனேஷ் 82 ரன்களும், காவெம் ஹோட்ஜ் சதமடித்து 120 ரன்களும் குவித்தனர். தற்போதைய நிலையில் 65 ரன்கள் மட்டுமே பின்தங்கியுள்ள அந்த அணிக்கு களத்தில் ஜேசன் ஹோல்டர் 23*, டா சில்வா 32* ரன்களுடன் உள்ளனர். முன்னதாக அ
இப்போட்டியில் இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் ஒரே ஓவரில் 152, 149.66, 152, 154.49, 156.26, 151.27 கி.மீ அனல் பறக்கும் வேகத்தில் பந்துகளை வீசினார்.

- Advertisement -

குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்களின் முகத்துக்கு நேராக அதிரடியான வேகத்தில் வீசிய அவர் சொந்த மண்ணில் அதிவேகமான ஓவரை வீசிய இங்கிலாந்து வீரர் என்ற சாதனையும் படைத்தார். இந்நிலையில் தமது வீட்டில் குழந்தை மனைவிகள் இருப்பதால் கொஞ்சம் குறைந்த வேகத்தில் வீசுமாறு மார்க் வுட்’டுக்கு கோரிக்கை வைத்ததாக காவெம் ஹோட்ஜெ கலகலப்பாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அவங்க ஓய்வை அறிவிச்சா நானும் சொல்லனுமா? தனது ஓய்வு குறித்த முக்கிய தகவலை வெளியிட்ட – முகமது ஷமி

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “மிருகத்தனமாக இருந்தது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பந்திலும் 90 மைல் வேகத்தை எதிர்கொள்ள முடியாது. ஒரு கட்டத்தில் “ஹேய் எனக்கு வீட்டில் மனைவியும் குழந்தைகளும் உள்ளனர்” என்று அவரிடம் நகைச்சுவை செய்தேன். இருப்பினும் அதை எதிர்கொண்டு சதத்தை அடித்தது திருப்திகரமாக இருந்தது. டெஸ்ட் கிரிக்கெட் மிருகத்தனமானது. சவாலானது மனதளவில் சோர்வடை வைக்கக்கூடியது. மார்க் வுட் போன்ற நண்பர்களை எதிர்கொள்வது கடினம் என்றாலும் திருப்திகரமாக உள்ளது” என்று கூறினார்.

- Advertisement -