தெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியானது தற்போது இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு இங்கு நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. ஏற்கனவே பாகிஸ்தான் மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்திய தென்னாப்பிரிக்க அணி இம்முறை இந்திய அணிக்கு எதிராகவும் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுப்மன் கில் இரண்டு விடயத்தையும் சரியாக செய்கிறார் : ஹாசிம் அம்லா
இந்நிலையில் இந்தியா வந்தடைந்துள்ள தென்னாப்பிரிக்கா அணி இந்த டெஸ்ட் தொடரில் எவ்வாறு செயல்படப்போகிறது என்பது குறித்தும் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் குறித்தும் சில கருத்துக்களை முன்னாள் தென்னாப்பிரிக்க வீரரான ஹாசிம் அம்லா பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது :
தற்போதைய தென்னாப்பிரிக்க அணி நான் முன்பு கூறியதைப் போன்றே மிகச் சிறப்பான அணியாக இருக்கிறது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்ட அவர்களுக்கு இந்திய அணிக்கு எதிரான தொடர் ஒரு மிகப்பெரிய சவாலை ஏற்படுத்தக்கூடிய தொடராக அமையும்.
துணை கண்டத்தில் அதுவும் தரமான வேகப்பந்து வீச்சாளர்கள், சுழற்பந்து வீச்சாளர்களை கொண்ட இந்திய அணிக்கு எதிராக விளையாடுவது என்பது எளிதானது கிடையாது. இம்முறை தென்னாப்பிரிக்க டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ள பலவீரர்கள் ஒருநாள் அணியில் இடம் பெறாதவர்கள் என்பதனால் அணித்தேர்வு மிகச் சிறப்பாக இருக்கிறது என்று கூறுவேன்.
இருந்தாலும் இந்தியாவில் அதிகம் விளையாடி அனுபவம் இல்லாத வீரர்கள் இருப்பதினால் அது ஒரு வகையில் இந்திய அணிக்கு சாதகமாக அமையலாம். இரு அணிகளிலுமே தரமான பேட்ஸ்மேன்கள் மற்றும் பௌலர்கள் இருப்பதினால் இந்த தொடரானது ரசிகர்களுக்கு நிச்சயம் விருந்தாக அமையும். மேலும் இந்திய அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா, அஸ்வின் போன்ற வீரர்கள் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் சுப்மன் கில் இந்திய அணியை மிகச்சிறப்பாக வழி நடத்தி வருகிறார்.
இதையும் படிங்க : இன்னும் 54 ரன்கள் தேவை.. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் சாதனை நிகழ்த்த காத்திருக்கும் – சுப்மன் கில்
டெஸ்ட் போட்டிகளில் கேப்டன்சி செய்வதும், துவக்க வீரராக விளையாடுவதும் மிக கடினமான ஒரு பதவி ஆனால் அதை இரண்டையும் மிகச் சிறப்பாக சுப்மன் கில் செய்து வருகிறார். அவரது தலைமையில் இந்திய டெஸ்ட் அணி அடுத்து அத்தியாத்தை நோக்கி நகர்ந்து வருகிறது என்றும் ஹாசிம் அம்லா பாராட்டியது குறிப்பிடத்தக்கது.



