- Advertisement -
உலக கிரிக்கெட்

விராட், ரூட் இல்லை.. 2 இந்தியர்கள் உட்பட தனது ஆல் டைம் டெஸ்ட் லெவன் அணியை வெளியிட்ட அம்லா

நூற்றாண்டு வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பல்வேறு நாடுகளுக்காக பல மகத்தான ஜாம்பவான் வீரர்கள் விளையாடியுள்ளனர். அவர்களை ஒன்றிணைத்து முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் ஹாசிம் அம்லா தம்முடைய ஆல் டைம் கனவு டெஸ்ட் அணியை தேர்ந்தெடுத்துள்ளார். அந்த அணியில் நவீன டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகச்சிறந்த வீரர்களாக கருதப்படும் விராட் கோலி, ஜோ ரூட், ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன் ஆகியோர் இடம் பெறவில்லை.

அம்லா தம்முடைய கனவு அணியில் முதலாவதாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகப் வெற்றிகளை பெற்ற கேப்டனாக உலக சாதனை படைத்துள்ள தென்னாபிரிக்காவின் கிரேம் ஸ்மித்தை தேர்ந்தெடுத்துள்ளார். 9265 ரன்கள் குவித்துள்ள ஸ்மித் ஓப்பனிங் வீரராகவும் இடம் பிடித்துள்ளார். அவருடன் 103 போட்டிகளில் 9030 ரன்களை குவிதுள்ள ஆஸ்திரேலியாவின் மேத்தியூ ஹைடன் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இடம் பிடித்துள்ளார்.

- Advertisement -

அம்லா ஆல் டைம் லெவன்:

3வது இடத்தில் 134 போட்டிகளில் 10524 ரன்கள் குவித்துள்ள இந்தியாவின் பெருஞ்சுவர் ராகுல் டிராவிட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 4வது இடத்தில் ஆஸ்திரேலியாவின் வெற்றிகரமான கேப்டன் மற்றும் பேட்ஸ்மேன் ரிக்கி பாண்டிங் அணியில் இடம் பிடித்துள்ளார். 5வது இடத்தில் வரலாற்றின் மகத்தான ஆல் ரவுண்டராக கருதப்படும் ஜேக் காலிஸ் இடம் பெற்றுள்ளார்.

13289 ரன்கள் 292 விக்கெட்டுகள் எடுத்துள்ள காலிஸ் இல்லாத ஆல் டைம் கனவு அணி இருக்க முடியாது என்று சொல்லலாம். அடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்துள்ள இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 5வது இடத்தில் அம்லா அணியில் இடம் பிடித்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக தென்னாப்பிரிக்காவின் நம்பிக்கை நட்சத்திரமாக செயல்பட ஏபி டீ வில்லியர்ஸ் விக்கெட் கீப்பராக தேர்வாகியுள்ளார்.

- Advertisement -

2 இந்தியர்களுக்கு இடம்:

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கட்டுகள் எடுத்த 2 ஜாம்பவான் ஸ்பின்னரான முத்தையா முரளிதரன் மற்றும் ஷேன் வார்னே ஆகியோரும் அந்த அணியில் இடம் படித்துள்ளார்கள். வேகப்பந்து வீச்சு துறையில் இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு இடமில்லை. மாறாக தென்னாபிரிக்காவின் நெருப்பு பவுலர் டேல் ஸ்டைன் மற்றும் ஆஸ்திரேலிய ஜாம்பவான் கிளன் மெக்ராத் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

இதையும் படிங்க: பஸ்பால் இங்கிலாந்துக்கு மாரல் வெற்றி மட்டுமே.. அவர் இல்லனாலும் 3 – 1ன்னு ஆஸி ஜெய்க்கும்.. வார்னர் பேட்டி

இந்த அணிக்கு ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருப்பார் என்றும் அம்லா கூறியுள்ளார். அவருடைய கனவு அணி: கிரேம் ஸ்மித், மேத்தியூ ஹைடன், ரிக்கி பாண்டிங், ஜேக் காலிஸ், சச்சின் டெண்டுல்கர், ஏபி டீ வில்லியர்ஸ் (கீப்பர்), ஷேன் வார்னே, டேன் ஸ்டைன், முத்தையா முரளிதரன், கிளன் மெக்ராத்

- Advertisement -