- Advertisement -
உலக கிரிக்கெட்

திடீரென தனது ஓய்வு முடிவை அறிவித்த தெ.ஆ அணியின் துவக்க வீரர் – காரணம் இதோ

உலக கோப்பை தொடர் முடிந்து பல வீரர்கள் தங்களது ஓய்வு முடிவை அறிவித்து வரும் நிலையில் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னணி வீரரான ஹசிம் ஆம்லா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.

இதுவரை தென்னாப்பிரிக்க அணிக்காக 124 டெஸ்ட் போட்டிகள், 181 ஒருநாள் போட்டிகள் மற்றும் 44 டி20 போட்டியில் விளையாடி உள்ளார் இவர் மொத்தமாக 18672 ரன்களை அடித்துள்ளார். அத்துடன் 55 சதங்களும் 88 அரை சதங்களும் அடித்துள்ளார்.

- Advertisement -

36 வயதான ஹசிம் ஆம்லா தனது ஓய்வு முடிவை குறித்து தெரிவித்ததாவது : தென்னாப்பிரிக்க அணிக்காக நான் விளையாடியதற்கு கடவுளுக்கு நன்றி சொல்கிறேன். இந்த கிரிக்கெட் பயணத்தில் நிறைய கற்றுக்கொண்டேன். அத்துடன் கிரிக்கெட் வாழ்வின் நல்ல நண்பர்கள் பலரை சம்பாதித்து உள்ளேன்.

எனது கிரிக்கெட் பயணத்துக்கு உதவிய என் பெற்றோர்களுக்கும் ரசிகர்களுக்கும் எனது அணி வீரர்கள் மற்றும் மற்ற அணி வீரர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று சோகமாக தனது ஓய்வு முடிவை அளித்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by