Worldcup : அடிப்பட்டபோதும் தண்ணீர் அருந்தாத அம்லா – ஏன் தெரியுமா ?

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த உலகக்கோப்பை தொடர் நேற்று பிரமாண்டமாக துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள்

- Advertisement -

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த உலகக்கோப்பை தொடர் நேற்று பிரமாண்டமாக துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தயாராக உள்ளன. இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.

- Advertisement -

நேற்று நடந்த முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதின. இந்த போட்டி இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு துவங்கியது. இந்தப்போட்டியில் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும், டூப்லெஸிஸ் தலைமையிலான தென்னாபிரிக்க அணியும் ஓவல் மைதானத்தில் மோதின.

இந்த போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 311 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதன்பிறகு ஆடத்துவங்கிய தென்னாபிரிக்க அணியின் துவக்க வீரரான ஆம்லா ஆர்ச்சர் வீசிய பவுன்சரில் ஹெல்மெட்டில் அடிவாங்கினார். உடனே முதலுதவி அளிக்க அணி மருத்துவர் அம்லாவை நோக்கி வந்து தண்ணீர் குடிக்கும்படி கூறினார். ஆனால், அதனை அம்லா மறுத்தார் மேலும், எந்த ஒரு ஜூஸ் போன்ற எந்த பானத்தையும் அருந்தவில்லை.

amla 1

அதன் காரணம் யாதெனில் ரமலான் மாத நோன்பில் இருக்கும் அம்லா நேற்று அடிபட்ட பிறகும் விரதத்தை கடைபிடிக்க தண்ணீர் அருந்தவில்லை என்று போட்டிக்கு பின்பே தெரியவந்தது.

Advertisement