
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியானது தற்போது இந்திய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. ஏற்கனவே இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி இந்த டெஸ்ட் தொடரை ஒன்று பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் கைப்பற்றியது.
அதனை தொடர்ந்து இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் வெற்றி பெறப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இந்த முதலாவது ஒருநாள் போட்டியானது ஜூன் 13-ஆம் தேதியான இன்று தரம்சாலா மைதானத்தில் மதியம் 1:30 மணிக்கு துவங்குகிறது.
இந்த போட்டிக்காக தற்போது இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இந்த இந்திய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கு முன்னதாக பேட்டி அளித்துள்ள ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஹஸ்மத்துல்லா ஷாகிதி இந்திய அணியை வீழ்த்தி வரலாறு படைப்போம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : ஏற்கனவே எங்களுக்கு தரம்சாலா மைதானத்தில் விளையாடிய அனுபவம் உள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் வங்கதேச அணிக்கு எதிராக இங்கு விளையாடிவுள்ளோம். இந்த மைதானத்தில் மிகவும் வெப்பம் அதிகமாக இருக்கும்.
இதையும் படிங்க : எனிமியா இருந்து நண்பராய் மாறியவர் நீங்கள்.. கேன் வில்லியம்சன் ஓய்வு குறித்து – விராட் கோலி உருக்கம்
அதேபோன்று சுழற்பந்து வீச்சுக்கு ஆடுகளங்கள் இருக்கும் என்பதனால் எங்களது சுழற்பந்து வீச்சாளர்களை வைத்து இந்த தொடரில் வெற்றி பெறுவோம் என்கிற நம்பிக்கை இருக்கிறது என ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஹஸ்மத்துல்லா ஷாஹிதி கூறியது குறிப்பிடத்தக்கது.