
இந்திய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியானது இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரை இழந்தது. அதனை தொடர்ந்து தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணிக்கு எதிராக பங்கேற்று விளையாடி வருகிறது. அந்த வகையில் நேற்று தரம்சாலா நகரில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி இந்திய அணிக்கு எதிராக விளையாடியிருந்தது.
நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததால் முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 24.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 194 ரன்களை குவித்தது. பின்னர் 195 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 22.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 195 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரின் தற்போதைய நிலையில் இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்விக்கு பின்னர் பேசிய ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஹஸ்மத்துல்லா ஷாஹிதி கூறியதாவது : இந்த போட்டி உண்மையிலேயே எங்களுக்கு ஒரு கடினமான போட்டியாக அமைந்தது.
ஏனெனில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் நாங்கள் பெரிய ரன் குவிப்பை நோக்கி நகர முடியாமல் சென்றது. ரஹ்மனுல்லா குர்பாஸ் இந்த போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடியும் மிடில் ஆர்டரில் நாங்கள் பெரியளவில் ரன்களை சேர்க்க தவறியதால் எங்களால் பெரிய ரன் குவிப்பிற்கு செல்ல முடியாமல் போனது. இந்த போட்டியில் 230 ரன்கள் வரை அடித்திருந்தால் சவாலான இலக்காக இருந்திருக்கும்.
இதையும் படிங்க : ஆப்கானிஸ்தான் அணியை தடுத்து நிறுத்தி நாங்கள் பெற்ற வெற்றிக்கு இதுவே காரணம் – சுப்மன் கில் பேட்
குர்பாஸ் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய வேளையில் இறுதி கட்டத்தில் நாங்கள் 30 ரன்கள் வரை குறைவாக எடுத்ததாக உணர்கிறோம். உண்மையிலேயே பேட்டிங்கில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் தான் இந்த தோல்வியை சந்தித்தோம் என ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஸ்மத்துல்லா ஷாஹிதி கூறியது குறிப்பிடத்தக்கது.