சோயிப் மாலிக் சானியா மிர்சாவை தொடர்ந்து இந்திய பெண்ணை திருமணம் செய்ய இருக்கும் பாகிஸ்தான் வீரர் – விவரம் இதோ

Hasan-Ali-2
- Advertisement -

பாகிஸ்தான் அணியின் கிரிக்கெட் வீரரான சோயப் மாலிக், இந்திய அணியின் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை திருமணம் செய்தபோது பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் அந்த திருமணத்தை பரபரப்பாக பார்த்தன.

Hasan-Ali

- Advertisement -

அதனைத் தொடர்ந்து தற்போது மேலும் ஒரு பாகிஸ்தான் வீரர் இந்திய பெண்ணை திருமணம் செய்ய இருக்கிறார். பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஹசன் அலி. 2016ஆம் ஆண்டு சர்வதேச போட்டியில் பாகிஸ்தான் அணிக்காக அறிமுகமானார். அடுத்த ஆண்டிலேயே (2017) ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் தொடர் நாயகன் விருது பெற்று கிரிக்கெட் உலகத்தை திரும்பிப் பார்க்க வைத்தார். மேலும் 2017 ஆம் ஆண்டு விரைவாக 50 விக்கெட் வீழ்த்திய பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

அதே ஆண்டு சிறந்த பாகிஸ்தான் வீரர் என்ற விருதினையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் இவர் பெற்றார். ஹசன் அலி தற்போது ஹரியானா மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட ஷமையா என்பவரை காதல் திருமணம் புரிய உள்ளார். ஷமையா ஒரு ஏரோநாட்டிக்கல் பட்டதாரி ஆவார். இவர் பிளைட் இன்ஜினியராக எமிரேட்ஸ் ஏர்லைன்சில் வேலை பார்க்கிறார். ஹஸன் அலி மற்றும் ஷமையா ஆகியோர் அவர்கள் இருவருக்கும் பொதுவான நண்பர் ஒருவர் மூலம் அறிமுகமாகி பின்னர் அவர்களுக்குள் காதல் மலர்ந்தது தற்போது கல்யாணம் வரை வந்து நிற்கிறது.

ஷமையா ஹரியானா மாநிலத்தை பூர்வீகமாக கொண்டாலும் தற்போது பெற்றோர்களுடன் துபாயில் வசித்து வருகிறார். இவர்களது திருமணம் ஆகஸ்ட் 20-ஆம் தேதி துபாயில் நடைபெற உள்ளது. துபாய் அட்லாண்டிஸ் பாம் ஹோட்டலில் நடைபெற உள்ள இந்த திருமண விழாவிற்கு கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் வருகை புரிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சானியா மிர்சா சோயப் மாலிக் திருமணத்தை தொடர்ந்து இந்த ஜோடியின் திருமணம் நிச்சயம் பரபரப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

Advertisement