வாகா எல்லையில் இந்திய ராணுவ வீரர்களை அவமதித்த பாக். கிரிக்கெட் வீரர் !

- Advertisement -

இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் வாஹா எல்லை பகுதியில் அமைந்துள்ள அட்டாரி-வாஹா என்னும் இந்தியா பாகிஸ்தான் எல்லை பகுதியில் பாகிஸ்தானின் வேக பந்து வீச்சாளர் செய்த செயல்களால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா பாகிஸ்தான் எல்லையான வாஹா பகுதியில் தினமும் மாலை இரு நாட்டு அணிகளின் கொடியை இருக்கும் நிகழ்வை காண பல லட்சணக்கான மக்கள் அங்கே திரண்டு வருவார்கள். அது மட்டுமின்றி இரு நாட்டு இராணுவ அணிகளும் தங்களது பயிற்சி திறனை காட்ட மாச் பாஸ்ட் எனப்படும் ஒத்திகையை தினமும் நேருக்கு நேர் செய்வதை காண பலரும் ஆவலுடன் காத்து கொண்டிருப்பனர்.

hasan

இந்நிலையில் நேற்று நடைபெற்ற கொடி இருக்கும் நிகழ்வின் போது இரு நாட்டு ராணுவ அணிகளை சார்ந்த வீரர்களும் ஓத்திகையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அங்கே திடீரென்று பாகிஸ்தானின் வேக பந்து வீச்சாளர் ஹசன் அலி  ஒத்திகை நடக்கும் இடத்திற்கு சென்று மைதானத்தில் தான் விக்கெட் எடுத்தால் செய்யும் நக்கலாக செய்கையை இந்திய ராணுவ வீரர்களை பார்த்து செய்தார்.இதனை அங்கிருந்த பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை.

- Advertisement -

சர்ச்சைக்குரிய இந்திய பாக்கிஸ்தான் எல்லை பகுதியில் ஏதோ சுற்றுலா வந்தது போல சுமார் 40 நொடிகளுக்கு மேலாக அவர் இந்திய இராணுவ வீரர்களை பார்த்து கிண்டல் செய்து கொண்டிருந்தார். அதன் பின்னர் பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகளால் பத்திரமாக வழியணிப்பி வைக்கப்பட்டார்.இந்த வீடியோ பாகிஸ்தான் ஊடங்களில் வெளியாகி மிகுந்த வைரலாகி வருகின்றனர். மேலும் ஹசன் அலியின் இந்த செயலுக்கு பாகிஸ்தான் ராணுவமோ அந்த நாட்டு அரசோ எந்த ஒரு கண்டனத்தையும் தெரிபிக்கவில்லை.

ஆனால் சர்சையான இந்தியா பாகிஸ்தான் எல்லை பகுதியில் தனி நபர் ஒருவர் இது போன்ற அவமதிப்பு செயலில் இடுபட்டதை இந்தியர்கள் கண்டித்து வருகின்றனர்.மேலும் இந்திய ராணுவத்தை கேலி செய்த பாகிஸ்தான் பந்துவிச்சாளர் ஹசன் அலி மீது கண்டிப்பாக புகார் அளிக்கபடும் என்று இந்த ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து கூடுதலாக தெரிவித்த பஞ்சாப் எல்லைப் பாதுகாப்புப் படை ஐஜி முகுல் கோயல் கூறுகையில், ‘ஹசன் அலியின் செயல்கள் இருநாட்டு அணிவகுப்பு மரியாதைக்குக் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து முறைப்படி பாகிஸ்தான் ராணுவத்திடம் புகார் அளிப்போம். இருநாட்டு வீரர்களும் தீவிரமான அணிவகுப்பு நடக்கும் போது பார்வையாளர்கள் மேடையில் இருப்பவர் ஒருவரும் அணிவகுப்புக்குள் வர அனுமதியில்லை. அணிவகுப்பு முடிந்தபின் அவர்கள் எந்தவிதமான செயல்களையும் செய்ய அனுமதி உண்டு. ஆனால், அணிவகுப்பின் போது இதுபோன்ற செய்ய அனுமதி கிடையாது’

Advertisement