உழைப்புக்கு பரிசு கிடைச்சுருக்கு.. ரோஹித் பாய் சொன்ன ஐடியா தான் ஹெல்ப் பண்ணுச்சு.. ராணா பேட்டி

Harshit Rana
- Advertisement -

நாக்பூரில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிப்ரவரி ஆறாம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து 248 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக கேப்டன் ஜோஸ் பட்லர் 52, ஜேக்கப் பேத்தல் 51 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 3, ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.

அடுத்ததாக பேட்டிங் செய்த இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா 2, அறிமுக வீரர் ஜெய்ஸ்வால் 15 ரன்களில் அவுட்டானார்கள். ஆனால் மிடில் ஆர்டரில் அபாரமாக விளையாடிய சுப்மன் கில் 87, ஸ்ரேயாஸ் ஐயர் 59, அக்சர் படேல் 52 ரன்கள் எடுத்தார்கள். அதனால் 38.4 ஓவரில் 251-6 ரன்கள் எடுத்து வென்ற இந்தியா 1 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

- Advertisement -

சிறந்த அறிமுகம்:

இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக அடில் ரசித், சாகிப் மஹமத் தலா 2 விக்கெட் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. முன்னதாக இந்தப் போட்டியில் அறிமுகமான ஹர்ஷித் ராணா முதல் 3 ஓவரில் 37 ரன்கள் வழங்கி சுமாராக பவுலிங் செய்தார். ஆனால் அதன் பின் சிறப்பாக பவுலிங் செய்த அவர் பென் டக்கெட், ஹரி ப்ரூக்கை ஒரே ஓவரில் அவுட்டாக்கி மொத்தம் 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.

இந்நிலையில் ஆரம்பத்தில் அடி வாங்கிய போது முடிந்தளவுக்கு நெருக்கமாக பவுலிங் செய்யுமாறு கேப்டன் ரோஹித் சர்மா சொன்னதாக ராணா கூறியுள்ளார். அது தமக்கு உதவியது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “தொடர்ச்சியாக நல்ல லென்த்தில் பவுலிங் செய்வதே முதன்மையான இலக்காகும். ஆரம்பத்திலேயே அவர்கள் என்னுடைய பந்துகளை அட்டாக் செய்தார்கள்”

- Advertisement -

ரோஹித் உதவி:

“ஆனால் அப்போதும் நான் என்னுடைய லென்த்தில் இருந்து நகரவில்லை. அது பரிசைக் கொடுத்தது. அவர்கள் அதிரடியாக விளையாடப் பார்த்தார்கள். அதையே நானும் ரோகித் பையாவும் விவாதித்தோம். அதாவது நான் முடிந்தளவுக்கு நெருக்கமாக பவுலிங் செய்ய வேண்டும். அதையே நானும் முயற்சித்தேன். பிட்ச் இருதலைப் பட்சமாக இருந்தது”

இதையும் படிங்க: துணை கேப்டனா ரோஹித் பாய் என்கிட்ட இதை கேட்கிறாரு.. இங்கிலாந்தை வீழ்த்திய ஆட்டநாயகன் கில் பேட்டி

“அதன் காரணமாக சில பந்துகள் திடீரென நின்று வந்தது. இந்தப் போட்டியில் அறிமுகமானது எனது கனவு வாழ்க்கைப் போல இருக்கிறது. இதற்காக நான் கடினமாக உழைத்துள்ளேன். அந்த உழைப்புக்கான பரிசு தற்போது ஒரு வழியாக எனது வந்து சேர்வதாக உணர்கிறேன்” என்று கூறினார். அந்த வகையில் டி20 தொடரை போலவே ஒருநாள் தொடரிலும் இந்திய அணி அசத்தத் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement