இதுக்காக ரசிகர்கள் சொல்றத பத்தி எனக்கு கவலையில்ல.. என் திட்டத்தையும் மாத்த மாட்டேன்.. ராணா பேட்டி

Harshit rana
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியில் ஹர்ஷித் ராணா தற்சமயத்தில் ரசிகர்களால் அதிகம் கிண்டல்கள் மற்றும் விமர்சனங்களை சந்திக்கும் வீரராக வலம் வருகிறார். ஏனெனில் 2024 ஐபிஎல் கோப்பையை கௌதம் கம்பீர் வழிகாட்டுதலில் கொல்கத்தா வெல்வதற்கு அவர் முக்கிய பங்காற்றினார். அதனால் இந்திய அணியின் பயிற்சியாளராக வந்தது முதல் அவருக்கு கௌதம் கம்பீர் 3 வகையான கிரிக்கெட்டிலும் வாய்ப்புகளை அள்ளி வழங்கி வருகிறார்.

அந்த வாய்ப்பில் கடந்த ஆஸ்திரேலியா தொடரில் சிட்னியில் நடைபெற்ற போட்டியிலும் ராஞ்சியில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியிலும் அவர் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தார். அதைத் தவிர்த்து ஏனைய போட்டிகளில் ராணா அசத்தவில்லை என்றே சொல்லலாம். இருப்பினும் குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங் ஆகிய சாம்பியன் பவுலர்களை காட்டிலும் அவருக்கு கௌதம் கம்பீர் தொடர்ச்சியாக வாய்ப்புகளை வழங்கி வருகிறார்.

- Advertisement -

ரசிகர்கள் பற்றி கவலையில்லை:

அதனாலேயே ஏராளமான ரசிகர்களும் சில முன்னாள் வீரர்களும் அவர்களை விமர்சித்தார்கள். அதற்கு 23 வயது குழந்தை ராணாவை விமர்சிப்பது வெட்கக்கேடானது என்று பதிலடி கொடுத்த கம்பீர் தொடர்ந்து அவருக்கு வாய்ப்பளித்து வருகிறார். இந்நிலையில் வெளிப்புறத்தில் ரசிகர்கள் செய்யும் கிண்டல்கள் மற்றும் விமர்சனங்களைப் பற்றி தமக்குக் கவலையில்லை என்று ராணா தெரிவித்துள்ளார்.

ஒருவேளை அதற்கு கவனம் கொடுத்தால் தம்மால் இந்திய அணிக்காக அசத்த முடியாது என்று ராணா கூறியுள்ளார். அத்துடன் முதல் போட்டியில் 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியதால் 2வது தென்னாப்பிரிக்கா ஒருநாள் போட்டியில் தமது திட்டங்களில் மாற்றம் செய்யப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி ராணா பேசியது பின்வருமாறு.

- Advertisement -

ராணா வெளிப்படை:

“பாருங்கள் சார், ஒருவேளை நான் அந்த விஷயங்களை காதில் வாங்கினால் களத்திற்கு செல்லும் போது என்னுடைய மனதில் அழுத்தத்தை போட வேண்டியது வரும். அப்படி அழுத்தம் ஏற்பட்டால் என்னால் சிறந்த கிரிக்கெட்டை விளையாட முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. எனவே முடிந்தளவு விமர்சனங்களை நான் தவிர்க்க முயற்சிக்கிறேன் களத்தில் நான் செய்யும் விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்த விரும்புகிறேன்”

இதையும் படிங்க: நான் ஸ்கூல் படிச்சப்போ ஸ்ட்ராட் பண்ண ரோஹித், கோலி இன்னும் சவாலைத் தராங்க.. பவுமா பாராட்டு

“என்னைப் பற்றி யார் என்ன சொல்கிறார்கள் அல்லது வெளிப்புறத்தில் நடக்கும் விஷயங்கள் பற்றி எனக்கு கவலையில்லை. எனது கடின உழைப்பில் கவனம் செலுத்தும் நான் அனைத்தையும் களத்தில் செய்ய வேண்டும். முதல் போட்டியில் நன்றாக விளையாடியதால் மீண்டும் என்னுடைய திட்டங்களை மாற்றாமல் விளையாட உள்ளேன். எங்களுடைய அணியில் அனுபவமிக்க வீரர்கள் இருக்கும் சூழ்நிலையில் விளையாடக் கிடைத்துள்ள வாய்ப்பு எனக்கு பெரியது. எங்கள் அணியின் சூழ்நிலை நன்றாக இருக்கிறது” என்று கூறினார்.

Advertisement