நான் ஸ்கூல் படிச்சப்போ ஸ்ட்ராட் பண்ண ரோஹித், கோலி இன்னும் சவாலைத் தராங்க.. பவுமா பாராட்டு

Temba Bavuma
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியா 25 வருடங்கள் கழித்து தங்களது சொந்த மண்ணில் தோல்வியை சந்தித்தது. அடுத்து நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 2வது போட்டி டிசம்பர் மூன்றாம் தேதி ராய்ப்பூர் மைதானத்தில் நடைபெற உள்ளது.

முன்னதாக டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்காவிடம் சந்தித்த படுதோல்வியால் துவண்டு கிடந்த இந்தியா முதல் ஒருநாள் போட்டியில் வென்று மீண்டெழுந்துள்ளது. அந்த வெற்றிக்கு நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி சதத்தை அடித்து 135 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றினார். அவருடன் இணைந்து 136 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ரோஹித் சர்மா 57 ரன்கள் குவித்து வெற்றிக்கான அடித்தளத்தை அமைத்தார்.

- Advertisement -

விராட், ரோஹித் அசத்தல்:

அந்த வகையில் மிகப்பெரிய அனுபவத்தைக் கொண்ட அவர்கள் இந்திய அணிக்கு வந்தது புத்துணர்ச்சியை கொடுத்துள்ளது என்றே சொல்லலாம். இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவில் நடந்த 2007 டி20 உலகக்கோப்பையில் ரோஹித் சர்மா விளையாடிய போது தாம் பள்ளியில் பயின்று கொண்டிருந்ததாக கேப்டன் தெம்பா பவுமா தெரிவித்துள்ளார். அந்த வகையில் விராட் கோலியும் ரோஹித் சர்மாவும் நீண்ட காலம் தங்களைப் போன்ற எதிரணிகளுக்கு சவாலைக் கொடுத்து வருவதாக அவர் பாராட்டியுள்ளார்.

இது பற்றி 2வது போட்டிக்கு முந்தைய செய்தியாளர்கள் சந்திப்பில் பவுமா பேசியது பின்வருமாறு. “நாங்கள் ரோஹித் சர்மாவுக்கு எதிராக 2007 டி20 உலகக் கோப்பையில் விளையாடினோம் என்று நினைக்கிறேன். அந்த சமயத்தில் நான் பள்ளிப்படிப்பை முடிக்கவில்லை. விராட், ரோஹித் ஆகிய இருவரை சேர்த்தது அவர்களது அணிக்கு வலுவூட்டியுள்ளது”

- Advertisement -

பவுமா பாராட்டு:

“இத்தொடரின் துவக்கத்தில் நாங்கள் சொன்னது போல அவர்களிடம் ஏராளமான அனுபவம் இருக்கிறது. அவர்கள் கொண்டிருக்கும் ஏராளமான திறன் அவர்களுடைய அணிக்கு பயனைக் கொடுக்கும். அது எங்களுக்கு தெரியாமல் இல்லை. நீண்ட காலமாக விளையாடி வரும் அவர்களுக்கு எதிராக எந்தத் திட்டமும் புதிதாக இல்லை. அவர்கள் உலகத்தரமான வீரர்கள்”

இதையும் படிங்க: இந்தியாவின் தோல்விக்கு காரணமான.. கம்பீரின் ஆல் ரவுண்டர்ஸ் அப்ரோச் கரெக்ட் தான்.. ஜேக் காலிஸ் ஆதரவு

“முதல் போட்டியில் நாங்கள் தோல்வியின் பக்கத்தில் இருந்தோம். ஆனால் அவர்களுக்கு எதிராக நாங்கள் வெற்றியின் பக்கத்திலும் இருந்துள்ளோம். இந்தப் போட்டி இத்தொடரை இன்னும் சுவாரசியமாக மாற்றும். எங்கள் வீரர் மார்க்கோ யான்சன் டாப் 10 ஆல் ரவுண்டர்களின் பட்டியலில் நிச்சயம் இருப்பார். சில நேரங்களில் பேட்டிங், பவுலிங் ஆகிய 2 துறைகளிலும் அவர் வெளிப்படுத்தும் ஆட்டம் எங்களுடைய வெற்றிக்கு மகத்தான பங்காற்றுகிறது” என்று கூறினார்.

Advertisement