டி20 உலககோப்பை மட்டுமின்றி 2026 ஐ.பி.எல் தொடரில் இருந்தும் விலகிய ஹர்ஷித் ராணா – என்ன காரணம்?

Harshit Rana
- Advertisement -

அண்மையில் நடைபெற்று முடிந்த 2026 டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடருக்கு அடுத்து இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடருக்கான 19 சீசனானது எதிர்வரும் மார்ச் 28-ஆம் தேதி துவங்கவுள்ளது. இந்த தொடருக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வரும் வேளையில் இந்த தொடரில் பங்கேற்கும் பத்து அணிகளும் தங்களது சொந்த மைதானத்தில் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

2026 ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகிய ஹர்ஷித் ராணா :

எதிர்வரும் இந்த ஐபிஎல் தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லப்போகிறது? என்கிற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ள வேளையில் தற்போது அனைத்து அணியின் நிர்வாகங்களும் தங்களது வீரர்களை ஒருங்கிணைத்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. அது தொடர்பான செய்திகளும் வெளியாகி வருகின்றன.

- Advertisement -

இந்த தொடருக்கான அனைத்து அணியிலும் இடம்பெற்றுள்ள வீரர்களில் சிலர் தொடர்ந்து இந்த தொடரில் இருந்து விலகி வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷித் ராணா ஏற்கனவே டி20 உலக கோப்பை தொடருக்கு முன்னதாக காயம் காரணமாக டி20 உலக கோப்பை தொடரிலிருந்து முற்றிலுமாக விலகினார்.

அவருக்கு பதிலாக மற்றொரு அனுபவ வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜிற்கு இந்திய டி20 உலக கோப்பை அணியில் இடம் கிடைத்தது. இந்நிலையில் ஐபிஎல் போட்டிக்குள் ஹர்ஷித் ராணா எப்படியாவது தயாராகி விடுவார் என்று பலரும் எதிர்பார்த்த வேளையில் டி20 உலக கோப்பை தொடர் மட்டுமின்றி எதிர்வரும் 2026 ஐபிஎல் தொடரில் இருந்தும் ஹர்ஷித் ராணா விலகியுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : இனிமேல் சுப்மன் கில் மீண்டும் டி20 அணியின் கேப்டனாக வாய்ப்பே இல்லை.. காரணத்தை கூறிய – ஆகாஷ் சோப்ரா

அதற்கு காரணம் யாதெனில் : ஏற்கனவே அவருக்கு ஏற்பட்ட காயம் இன்னும் முழுமையாக குணமடையாத காரணத்தினால் எதிர்வரும் 2026 ஐ.பி.எல் தொடர் முழுவதிலும் இருந்து அவர் விலகியுள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளரான அவர் இந்த தொடரில் இருந்து விலகவே அவருக்கு பதிலாக தற்போது மாற்று வீரரை ஒப்பந்தம் செய்ய வேண்டிய நிலைக்கு கே.கே.ஆ அணி தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement