2 விதிமுறைகளை மீறி திமிராக நடந்து கொண்ட கொல்கத்தா வீரர்.. 2 தண்டனைகளை வழங்கிய ஐபிஎல் நிர்வாகம்

- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடர் மார்ச் 23ஆம் தேதி நடைபெற்ற 3வது லீக் போட்டியில் ஹைதராபாத் அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா தோற்கடித்தது. கொல்கத்தாவில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் அணி 20 ஓவரில் 208/7 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஆண்ட்ரே ரசல் 64*, பில் சால்ட் 54 ரன்கள் அடித்தனர்.

ஹைதராபாத் சார்பில் அதிகபட்சமாக தமிழக வீரர் நடராஜன் மூன்று விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத் தொடர்ந்து 209 ரன்களை துரத்திய ஹைதராபாத் அணிக்கு மயங் அகர்வால் 32, அபிஷேக் சர்மா 32, ராகுல் திரிபாதி 20, ஐடன் மார்க்ரம் 18, அப்துல் சமத் 15 என முக்கிய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் எடுக்க தவறினர். அதனால் மிடில் ஆர்டரில் ஹென்றிச் க்ளாஸென் அதிரடியாக 63 ரன்கள் அடித்து போராடியும் 20 ஓவரில் 204/7 ரன்கள் மட்டுமே எடுத்த ஹைதராபாத் பரிதாபமாக தோற்றது.

- Advertisement -

பிசிசிஐ அபராதம்:
மறுபுறம் த்ரில் வெற்றி பெற்ற கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக ஹர்ஷித் ரானா 3 விக்கெட்டுகள் சாய்த்தார். குறிப்பாக கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்ட போது அபாரமாக பந்து வீசிய அவர் கிளாஸின் மற்றும் அப்துல் சமத் ஆகிய 2 முக்கிய விக்கெட்டுகளை எடுத்து வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார்.

ஆனால் ஆரம்பத்திலேயே மயங் அகர்வால் விக்கெட்டை எடுத்த அவர் அதை முத்தமிட்டு காற்றில் பறக்க விட்டு திமிராக கொண்டாடியது பல ரசிகர்களையும் அதிருப்தியில ஆழ்த்தியது. குறிப்பாக வெறும் 21 வயது மட்டுமே நிரம்பியுள்ள அவர் இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய சீனியர் வீரரான மயங் அகர்வால் முகத்தின் முன் கோபமாக முத்தத்தை காற்றில் பறக்க விட்டு வெளியே போங்க என்ற வகையில் கொண்டாடியது ரசிகர்களை கோபமடைய வைத்தது.

- Advertisement -

சொல்லப்போனால் “உங்களுடைய அணியுடன் கொண்டாடுங்கள் ஆனால் இப்படி கொண்டாடுவதற்கு அவசியமில்லை மிஸ்டர் ராணா” என்று ஜாம்பவான் சுனில் கவாஸ்காரம் அவரை கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில் அந்தப் போட்டியில் நடத்தை விதிகள் 2.5 பிரிவின் கீழ் லெவல் 1 தவறை ஹர்ஷித் ராணா செய்துள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. எனவே அவருக்கு இந்த போட்டி சம்பளத்திலிருந்து 10% மற்றும் 50% என மொத்தமாக 60% அபராதம் விதிக்கப்படுவதாக ஐபிஎல் நிர்வாகம் அதிரடியாக அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: 17-ஆண்டு ஐ.பி.எல் வரலாற்றில் முதல் நபராக ஹென்ரிச் கிளாசன் நிகழ்த்திய அசத்தல் சாதனை – விவரம் இதோ

அதாவது மயங் அகர்வால் விக்கெட்டை அப்படி கொண்டாடியதற்காக அவருக்கு அதிகபட்சமாக 50% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அது போக கடைசி ஓவரில் க்ளாஸென் விக்கெட்டை எடுத்த பின் மீண்டும் அவர் கிட்டத்தட்ட அதே போல கொண்டாடினார். எனவே அதற்கு 10% சேர்த்து ஹர்ஷித் ராணாவுக்கு மொத்தம் 60% சம்பளம் அபராதமாக விதிக்கப்படுவதாக ஐபிஎல் நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement