17-ஆண்டு ஐ.பி.எல் வரலாற்றில் முதல் நபராக ஹென்ரிச் கிளாசன் நிகழ்த்திய அசத்தல் சாதனை – விவரம் இதோ

Klassen
- Advertisement -

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக நேற்று ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது லீக் ஆட்டத்தில் 4 ரன்கள் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் அணி தோல்வியை சந்தித்து இருந்தாலும் அந்த அணியின் மிக சிறப்பான போராட்டமான இன்னிங்ஸ் அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்தது.

மேலும் சன் ரைசர்ஸ் அணியின் மிகச் சிறப்பான செயல்பாடு அனைவரது மத்தியிலும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய கொல்கத்தா அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் குவித்து அசத்தியது.

- Advertisement -

பின்னர் 209 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சன் ரைசர்ஸ் அணியானது துவக்கத்திலிருந்தே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிவரை போராடி 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்கள் குவித்தது.

இதன் காரணமாக சன் ரைசர்ஸ் அணியானது 4 ரன்கள் வித்தியாசத்தில் இறுதி நேரத்தில் தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் அணி சார்பாக அதிகபட்சமாக ஹென்ரிச் கிளாஸன் 29 பந்துகளை சந்தித்து 8 சிக்ஸர்களுடன் 63 ரன்கள் குவித்து கடைசி ஓவரின் போது ஆட்டமிழந்தார்.

- Advertisement -

அவர் அடித்த இந்த 63 ரன்கள் மூலமும், 8 சிக்சர் மூலமும் அவர் ஐபிஎல் வரலாற்றில் தனித்துவமான சாதனையை நிகழ்ச்சி அசத்தியுள்ளார். அந்த வகையில் 8 சிக்ஸர்கள் அடித்த கிளாசன் சன் ரைசர்ஸ் அணி சார்பாக ஒரு போட்டியில் அதிக சிக்சர்களை விளாசிய வீரர் என்ற சாதனையை டேவிட் வார்னர் மற்றும் மணிஷ் பாண்டே ஆகியோருடன் பகிர்ந்து கொண்டார்.

இதையும் படிங்க : கொல்கத்தா அணிக்கு கம்பீர் வந்த உடனே ஏற்பட்டுள்ள மாற்றம். நிச்சயம் இது அவரோட வேலை தான் – விவரம் இதோ

இருப்பினும் இதில் தனித்துவமான சாதனை யாதெனில் இந்த போட்டியில் அவே ஒரு பவுண்டரி கூட அடிக்காமல் 8 சிக்ஸர்களை விளாசி ஒரு இன்னிங்சில் பவுண்டரியே அடிக்காமல் அதிக சிக்ஸர்களை அடித்த வீரர் என்ற சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement