கொல்கத்தா அணிக்கு கம்பீர் வந்த உடனே ஏற்பட்டுள்ள மாற்றம். நிச்சயம் இது அவரோட வேலை தான் – விவரம் இதோ

Gambhir
- Advertisement -

17-ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது லீக் போட்டியானது நேற்று இரவு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயரின் தலைமையிலான கொல்கத்தா அணியும், உலக கோப்பை வின்னர் பேட் கமின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின.

பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய கொல்கத்தா அணியானது துவக்கத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

- Advertisement -

இருப்பினும் பிலிப் சாலட் (54), ரமன்தீப் சிங் (35), ரிங்கு சிங் (23) மற்றும் ஆண்ட்ரே ரசல் (64) ஆகியோரது சிறப்பான ஆட்டத்தினால் 20 ஓவர்களின் முடிவு 7 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்களை குவித்தது. சன் ரைசர்ஸ் அணி சார்பாக தமிழக வீரர் டி.நடராஜன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

பின்னர் 209 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சன் ரைசர்ஸ் அணியானது கடைசி ஓவர் வரை வெற்றி இலக்கை மிகச்சிறப்பாக துரத்தி வந்த வேளையில் ஒரு கட்டத்தில் அவர்களே வெற்றி பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இறுதி ஓவரில் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை தவற விட்டனர்.

- Advertisement -

20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த சன் ரைசர்ஸ் அணி 204 ரன்கள் குவித்து பிரமிக்க வைத்தது. இந்நிலையில் இந்த போட்டியின் போது திரில் வெற்றியுடன் தங்களது பயணத்தை துவங்கியுள்ள கொல்கத்தா அணியில் ஏற்பட்டுள்ள ஒரு முக்கிய மாற்றம் கெளதம் கம்பீரால் தான் நிகழ்த்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அந்த வகையில் கொல்கத்தா அணிக்கு பிலிப் சால்ட்டுடன் துவக்க வீரராக சுனில் நரைன் துவக்க வீரராக களமிறக்க கம்பீர் தான் ஆலோசனை வழங்கியிருப்பார் என்று தெரிகிறது.

இதையும் படிங்க : இதெல்லாம் தேவையில்லாதது மிஸ்டர் ராணா.. அவங்க அப்படி செஞ்சா தாங்குவீங்களா.. இளம் வீரரை விளாசிய கவாஸ்கர்

ஏனெனில் கம்பீர் கொல்கத்தா அணியின் கேப்டனாக செயல்பட்ட போது சுனில் நரைனை பிஞ்ச் ஹிட்டராக துவக்க வீரராக களமிறக்கி வந்தார். அதே பாணியைத் தான் தற்போது இந்த சீசனிலும் கடைபிடிக்க சுனில் நரைனை துவக்க வீரராக அவர் களமிறக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement