ஐ.பி.எல் போட்டிகளில் இந்திய வீரராக புதிய சாதனையை நிகழ்த்திய ஹர்ஷல் படேல் – என்ன தெரியுமா ?

Harshal-2
- Advertisement -

14-வது ஐபிஎல் தொடரின் நேற்றைய லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 149 ரன்களை குவித்தது. அதன்பின்னர் 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பெங்களூரு அணி 17.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 153 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்யத் துவங்கும்போது மிக அதிரடியாக தங்களது இன்னிங்சை தொடங்கியது.

lewis

- Advertisement -

குறிப்பாக அந்த அணியின் துவக்க வீரர் லீவிஸ் 37 பந்துகளில் 58 ரன்களும், ஜெய்ஸ்வால் 22 பந்துகளில் 31 ரன்களும் குவித்தனர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 8.2 ஓவர்களில் 77 ரன்களை சேர்த்தது. அதன்பின்னர் ராஜஸ்தான் அணி 11 ஓவர்களில் 100 ரன்களை கடந்ததால் மிகப்பெரிய ரன் குவிப்பிற்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பெங்களூர் அணியின் சிறப்பான பந்து வீச்சு காரணமாக இறுதியில் 149 ரன்களை மட்டுமே ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எடுத்தது.

இந்த போட்டியில் ஹர்ஷல் படேல் 3 விக்கெட்டுகளையும், சாஹல், ஷாபாஸ் அஹமது தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்கள். இந்த போட்டியில் வெற்றி பெற்ற பெங்களூர் அணியானது இந்த தொடரில் 7 வெற்றிகளுடன் மூன்றாவது இடத்தில் இருப்பது மட்டுமின்றி கிட்டத்தட்ட பிளேஆப் சுற்றின் வாய்ப்பையும் உறுதி செய்துள்ளது.

harshal 1

இந்நிலையில் இந்த போட்டியில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் பெங்களூர் அணியை சேர்ந்த ஹர்ஷல் படேல் ஐபிஎல் வரலாற்றில் ஒரு முக்கிய சாதனையை படைத்துள்ளார். அந்த சாதனையை யாதெனில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடாத வீரர் ஒருவர் ஒரே ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர் என்ற பெருமையை தற்போது ஹர்ஷல் படேல் பெற்றுள்ளார்.

- Advertisement -

harshal 1

இதற்கு முன்னர் கடந்த 2015 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடி வந்த யுஸ்வேந்திர சாஹல் அந்த தொடரில் 23 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். அதன் பின்னரே அவர் இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து தற்போது ஹர்ஷல் படேல் இதுவரை இந்திய அணிக்காக விளையாட நிலையில் இந்த தொடரில் 26 விக்கெட்டுகளை கைப்பற்றி அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரராக சாதனை படைத்துள்ளார்.

இதையும் படிங்க : விராட் கோலி இப்படி அவுட் ஆகி 6 வருஷம் ஆகுதாம். நேற்றைய போட்டியில் நடந்த சம்பவம் – வைரல் வீடியோ

ஒட்டுமொத்தமாக ஐ.பி.எல்-லின் ஒரே தொடரில் 32 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள பிராவோவின் சாதனையை நோக்கியும் தற்போது ஹர்ஷல் படேல் செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement