மீண்டும் மீண்டும் அதே தப்பை செய்யும் பெங்களூரு அணியின் பவுலர் – பறிபோகும் பெங்களூரு அணியின் வெற்றி

RCB
- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரின் 26வது லீக் போட்டியானது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் கே.எல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும், விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வெற்றிபெற்ற பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி பவுலிங்கை தேர்ந்தெடுத்தார். அதன்படி முதலில் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்களை எடுத்தது.

gayle

- Advertisement -

அந்த அணியின் சார்பாக, அணித் தலைவர் கேஎல் ராகுல் 91 ரன்களும், கிறிஸ் கெயில் 46 ரன்களும் அடித்தனர். பின்பு 180 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய பெங்களூர் அணி, மிடில் ஓவர்களில் தொடர்ச்சியான விக்கெட்டுகளை இழந்ததால் ரன் குவிக்க முடியாமல் திணறியது. இறுதியாக அந்த அணியால் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் பஞ்சாப் கிங்ஸ் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்தப் போட்டியில் பெங்களூர் அணியின் பௌலரானா ஹர்ஷல் பட்டேல் கடைசி ஓவரில் 22 ரன்களை விட்டுக்கொடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணி 179 ரன்கள் அடிக்க காரணமாக அமைந்தார். இதனால் அவரின் மேல் கடுமையான விமர்ச்சனங்களை வைத்து வருகின்றனர் பெங்களூர் அணியின் ரசிகர்கள். இப்போட்டியின் முதல் இன்னிங்சை விளையாடிக்கொண்டிருந்த பஞ்சாப் கிங்ஸ் அணி 19 ஓவரில் முடிவில் 157 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.

harshal 2

ஆனால் இருபதாவது ஓவரை வீசவந்த பெங்களூரு அணியின் பௌலர் ஹர்ஷல் பட்டேல் அந்த ஓவரில் 2 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகளை கொடுத்ததன் மூலம், பஞ்சாப் அணி அந்த ஓவரில் 22 ரன்களை அடித்தது. அவர் விட்டுக்கொடுத்த இந்த 22 ரன்கள்தான் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது எனவும் கூறலாம். இதற்கு முன்பு இதேபோல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராகவும் கடைசி ஓவரை வீசிய ஹர்ஷல் பட்டேல் அந்த ஓவரில் 37 ரன்கள் விட்டுக் கொடுத்து ஆட்டத்தின் போக்கையே மாற்றியதோடு மட்டுமில்லாமல், அணியின் தோல்விக்கும் முக்கிய காரணமாக திகழ்ந்தார்.

- Advertisement -

நேற்றைய போட்டியிலும் அதேபோல் கடைசி ஓவரில் 22 ரன்களை விட்டுக்கொடுத்து அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்து இருக்கிறார் ஹர்ஷல் பட்டேல். இந்த ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் முதல் மூன்று போட்டிகளில் சிறப்பாக பந்துவீசினார் ஹர்ஷல் பட்டேல். அந்த மூன்று போட்டிகளிலும் சேர்த்து 9 விக்கெட்டுகளை கைப்பற்றிய அவரின் எக்கனாமி 5.75 ஆக இருந்தது. ஆனால் கடைசி நான்கு போட்டிகளாக அவருடைய எகானமி ரேட் கிட்டத்தட்ட 12 ஆக இருக்கிறது.

Harshal

குறிப்பாக டெத் ஓவர்களில் மிகச் சிறப்பாக பந்து வீசி எதிரணி அதிக ரன்களை குவிக்க விடாமல் தடுத்து வந்த ஹர்ஷல் பட்டேல் தான், இப்போது அதே டெத் ஓவர்களில் எதிரணிக்கு ரன்களை வாரி வழங்கி பெங்களூர் அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக திகழ்கிறார். ஹர்ஷல் பட்டேலின் இந்த மோசமான செயல்பாடுகளை கண்ட பெங்களூர் அணியின் ரசிகர்கள் அவரின் மீது கடுமையான விமர்ச்சனங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதில் குறிப்பாக ஹர்ஷல் பட்டேல் உண்மையிலேயே டெத் ஒவர் ஸ்பெஷலிஸ்ட் தானா? என்று கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.

Advertisement