தற்போதைய நிலைமையில் பும்ராவை விட அவர்தான் சிறந்த டெத் பவுலர் – சச்சினின் பாரட்டை பெற்ற இந்திய பவுலர்

Sachin
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரின் லீக் சுற்று போட்டிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்ட டுப்லஸ்ஸிஸ் தலைமையில் முதல் முறையாக கோப்பையை வென்றேதீர வேண்டும் என்ற முனைப்புடன் விளையாடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இதுவரை பங்கேற்ற 13 போட்டிகளில் 7 வெற்றியும் தோல்வியும் பதிவு செய்து புள்ளி பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. தற்போதைய நிலையில் எஞ்சிய 1 போட்டியில் வென்றால் மட்டுமே பிளே-ஆப் சுற்றுக்கு செல்ல முடியும் என்ற இக்கட்டான நிலைமை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. பிளே ஆஃப் சுற்று தேடலில் நேற்று பஞ்சாப்பை தனது 13-ஆவது போட்டியில் எதிர்கொண்ட அந்த அணி 54 ரன் வித்தியாசத்தில் பெரிய தோல்வியை சந்தித்தது.

Virat Kohli 20

- Advertisement -

ப்ராபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்தாலும் அதற்கு ஈடாக 209 ரன்களை சேர்த்தது. அதிகபட்சமாக பவர்பிளேவில் அதிரடி காட்டிய ஜானி பேர்ஸ்டோ 66 (29) ரன்களும் கடைசி நேரத்தில் மிரட்டிய லியம் லிவிங்ஸ்டன் 70 (42) ரன்களும் விளாசினர்.

பெங்களூரு பரிதாபம்:
அதை தொடர்ந்து 210 என்ற கடின இலக்கை துரத்திய பெங்களூருவுக்கு பார்மின்றி தவிக்கும் விராட் கோலி 20 (14) கேப்டன் டு பிளேஸிஸ் 10 (8) மஹிபால் லோம்ரோர் 6 (3) என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி சென்றனர். மிடில் ஆர்டரில் கிளன் மேக்ஸ்வெல் 35 (22) ரஜத் படிடார் 26 (21) என அதிரடி காட்டினாலும் பெரிய ரன்களை எடுக்க தவறினர். இறுதியில் தினேஷ் கார்த்திக் 11 (11) சபாஸ் அகமது 9 (14) போன்ற பினிஷிங் வீரர்களும் சொற்ப ரன்களில் ஏமாற்றியதால் 20 ஓவர்களில் 155/9 ரன்கள் மட்டுமே எடுத்த பெங்களூரு பரிதாபமாக தோற்றது. பஞ்சாப் சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ரபாடா 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.

இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பந்து வீச தீர்மானித்த போது அந்த அணியின் பவுலர்கள் ரன்களை வாரி வழங்கியதே தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. குறிப்பாக கடந்த போட்டிகளில் சிறப்பாக பந்து வீசிய ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேசல்வுட் இம்முறை 4 ஓவர்களில் 64 ரன்கள் கொடுக்க அவருடன் சிராஜ் வெறும் 2 ஓவர்களில் 36 ரன்களை கொடுத்து மொத்தமாக 100 ரன்களை வாரி வழங்கினர்.

- Advertisement -

அசத்திய ஹர்ஷல்:
இப்படி 2 வேகப்பந்து வீச்சாளர்கள் சொதப்பிய நிலையில் நம்பிக்கை நட்சத்திரமான ஹர்ஷல் படேல் மட்டும் வழக்கம்போல 4 ஓவர்களில் 34 ரன்களை 8.50 என்ற சிறப்பான எக்கனாமியில் கொடுத்து 4 விக்கெட்டுகளை எடுத்து வெற்றிக்கு போராடினார். குறிப்பாக மிரட்டலாக பேட்டிங் செய்த பஞ்சாப்புக்கு எதிராக 20-வது ஓவரை வீசிய அவர் வெறும் 3 ரன்கள் மட்டுமே கொடுத்து முக்கியமான லிவிங்ஸ்டன் உட்பட 3 விக்கெட்டுகளை எடுத்து அட்டகாசமாக பந்து வீசினார்.

harshal 1

இதுபோல இறுதி கட்ட ஓவர்களில் ஸ்பெஷலிஸ்ட் என அழைக்கப்படும் ஜஸ்பிரித் பும்ரா போன்ற இதர இந்திய பவுலர்கள் கூட இந்த வருடம் தடுமாறும் நிலையில் இதுவரை பங்கேற்ற 12 போட்டிகளில் 7.72 என்ற சிறப்பான எக்கனாமியில் 18 விக்கெட்களை எடுத்துள்ள ஹர்ஷல் படேல் அதிக விக்கெட்டுகள் எடுத்த பவுலர்களின் பட்டியலில் 4-வது இடம் பிடித்துள்ளார்.

- Advertisement -

கடந்த 2021இல் அதிக விக்கெட்டுகள் எடுத்த பவுலராக ஊதா தொப்பியை வென்று சாதனை படைத்த அவர் சமீப காலங்களில் இந்தியாவின் சிறந்த டெத் பவுலராக வலம் வருகிறார் என்று ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார். இதுபற்றி நேற்றைய போட்டிக்குப் பின் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “பஞ்சாப் 209 ரன்களுக்கு மேல் அடிக்காததற்கு ஹர்ஷல் படேல் தான் காரணம். அவரின் பந்து வீச்சு ஒவ்வொரு நாளும் முன்னேற்றத்தை கண்டு வருகிறது. மேலும் அவர் தனது வேரியேஷன்களை எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு காட்டாமல் சிறப்பாக மறைக்கிறார். அவர் நம் நாட்டின் டெத் ஓவர்களில் சிறந்து விளங்கக்கூடிய பவுலர்களில் முதன்மையான ஒருவர். பேட்ஸ்மென்கள் அதிரடியாக அடிக்க முயற்சிக்கும் போது ஹர்ஷல் படேல் அவர்களையே மிஞ்சுகிறார்” என்று பேசினார்.

இதையும் படிங்க : இந்திய அணியில் தாராளமா சான்ஸ் கொடுக்கலாம் ஆனால் – புஜாராவுக்கு கிடைத்த ஜம்பாவனின் ஆதரவு

மிரட்டல் லிவிங்டன்:
அதேபோல் இந்த வருடத்தின் பிரம்மாண்ட சிக்ஸரான 117 மீட்டர் சிக்சரை பறக்க விட்டு ஒவ்வொரு போட்டியிலும் அசத்தலாக பேட்டிங் செய்து வரும் லியம் லிவிங்ஸ்டன் பற்றி சச்சின் பாராட்டி பேசியது பின்வருமாறு. “லிவிங்ஸ்டன் பேட்டை சுழற்றியடிக்கும் வேகம் அபாரமாக உள்ளது. அவர் பெரிய சிக்சர்களை மட்டும் அடிக்காமல் தனது அனுபவத்தையும் காட்டுகிறார். அவர் 150 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் அடிக்கக் கூடியவர் என்பதுடன் இறுதிவரை நின்று விளையாடக்கூடிய ஒருவராக திகழ்கிறார். அவரால்தான் பஞ்சாப் 209 ரன்களை எடுத்தது” என்று கூறினார்.

Advertisement