மும்பை அணிக்கு எதிராக யாரும் படைக்காத சாதனையை செய்து அசத்திய பெங்களூரு பவுலர் – விவரம் இதோ

Harshal
- Advertisement -

ஐபிஎல் தொடரின் முதலாவது போட்டி நேற்று மும்பை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 159 ரன்களை குவித்தது. அதற்கடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பெங்களூர் அணி இறுதி ஓவரின் கடைசி பந்தில் திரில் வெற்றியை பெற்றது.

RcbvsMi-1

- Advertisement -

இந்த போட்டியில் பெங்களூரு அணி சார்பாக விளையாடிய வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷல் பட்டேல் 4 ஓவர்களில் 27 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். டெல்லி அணிக்காக கடந்த ஆண்டு விளையாடிய ஹர்ஷல் படேலை டிரேடிங் முறையில் பெங்களூர் அணி இந்த வருடம் வாங்கியது.

நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் விராட் கோலி ஹர்ஷல் படேலை விளையாட வைப்பதாக கூறினார். அதன்படி விளையாடிய ஹர்ஷல் படேல் போட்டியில் சிறப்பாக பந்து வீசி ரன்களை கட்டுப்படுத்தியது மட்டுமின்றி கடைசி ஓவரில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி மும்பை அணியை முடக்கினார். இந்த போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது மூலம் அவர் மும்பை அணிக்கு எதிராக யாரும் படைக்காத சாதனையை அவர் படைத்துள்ளார்.

Harshal 1

அந்த சாதனை யாதெனில் இதுவரை மும்பை அணிக்கு எதிராக யாரும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது இல்லை. அந்த வகையில் முதல் ஐபிஎல் வரலாற்றில் முதல் நபராக மும்பை அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அவர் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக மும்பை அணிக்கு எதிராக தற்போதைய கேப்டன் ரோகித் சர்மா டெக்கான் சார்ஜர்ஸ் அணியில் விளையாடிய போது மும்பை அணிக்கு எதிராக 4 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார் அதுவே அதிகபட்ச விக்கெட்டுகளை கைப்பற்றிய சாதனையாக இருந்தது.

Harshal 2

அதனை தற்போது ஹர்ஷல் பட்டேல் முறியடித்துள்ளார். போட்டி முடிந்ததும் ஹர்ஷல் பட்டேல் குறித்து பேசிய விராட் கோலி : இந்த போட்டியில் அவர் வேறு ஒரு வீரராக முற்றிலும் சிறப்பாக விளையாடினார். இன்று அவருடைய திட்டங்கள் அனைத்தும் சரியாக இருப்பதாகவும், இனி அவர் பெங்களூர் அணியில் டெத் பவுலராக தொடருவார் என்றும் கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement