
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற நடப்பு 2025 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 61-வது லீக் போட்டியில் விளையாடிய சன்ரைசர்ஸ் அணியானது அந்த அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தலான வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் சன் ரைசர்ஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷல் பட்டேல் முன்னாள் மும்பை இந்தியன்ஸ் அணி வீரரான லாசித் மலிங்காவின் மாபெரும் சாதனை ஒன்றினை முறியடித்துள்ளார்.
அதுகுறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற சன் ரைசர்ஸ் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் குவித்தது.
இந்த போட்டியின் போது சன் ரைசர்ஸ் அணி சார்பாக அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்திய இசான் மலிங்கா 2 விக்கெட்டுகளையும், ஹர்ஷ் துபே, ஹர்ஷல் படேல் மற்றும் நிதீஷ் ரெட்டி ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றி இருந்தனர்.
இந்த போட்டியில் 4 ஓவர்களில் 49 ரன்களை விட்டுக் கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்திய ஹர்ஷல் படேல் அவர் வீழ்த்திய அந்த ஒரு விக்கெட் மூலம் தான் தற்போது மலிங்காவின் சாதனையையும் முறியடித்துள்ளார். அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதனில் : நேற்று லக்னோ அணியின் துவக்க வீரரான எய்டன் மார்க்ரம் விக்கெட்டை வீழ்த்தியதோடு சேர்த்து ஹர்ஷல் படேல் ஐபிஎல் தொடரில் தனது 150-வது விக்கெட்டை பதிவு செய்தார்.
அதிலும் குறிப்பாக 150 விக்கெட்டுகளை குறைவான பந்துகளில் எடுத்த வீரர் என்ற வரலாற்று சாதனையும் அவர் நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன் ஐபிஎல் தொடரில் லசித் மலிங்கா 2444 பந்துகளில் 150 விக்கெட்டை வீழ்த்தியிருந்த வேளையில் லசித் மலிங்காவை விட 63 பந்துகள் குறைவாக 2,381 பந்திலேயே 150 விக்கெட்டுகளை வீழ்த்தி ஹர்ஷல் படேல் அந்த சாதனையை முறியடித்துள்ளார்.
இதையும் படிங்க : லக்னோ அணியை வீழ்த்தி பெற்ற அசத்தலான வெற்றிக்கு காரணமே இவர்தான் – பேட் கம்மின்ஸ் பாராட்டு
இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் யுஸ்வேந்திர சாஹலும், நான்காவது இடத்தில் டுவைன் பிராவோவும், ஐந்தாவது இடத்தில் ஜஸ்ப்ரீத் பும்ராவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.