2024 டி20 உலகக்கோப்பைக்கான டாப் 5 பேட்ஸ்மேன்கள் இவர்கள் தான் – ஹர்ஷா போக்ளே பதிவு

Bhogle
- Advertisement -

வங்கதேச சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய இந்திய அணியானது அடுத்ததாக இலங்கை அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணியை நேற்று இரவு இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பி.சி.சி.ஐ தங்களது அதிகாரபூர்வமான டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது.

இந்த டி20 தொடருக்கான இந்திய அணியில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அதோடு தொடர்ச்சியாக சொதப்பி வரும் கே.எல் ராகுல், ரிஷப் பண்ட் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

- Advertisement -

அப்படி இந்த டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டதற்கு பின்னர் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் விமர்சகர்கள் என பலரும் இந்த தொடருக்கான அணித்தேர்வு குறித்த தங்களது கருத்துக்களை வெளிப்படையாக பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல கிரிக்கெட் விமர்சகரான ஹர்ஷா போக்ளே இந்த இந்திய அணி குறித்த தனது கருத்தினை டிவிட்டர் பக்கத்தின் மூலம் பகிர்ந்துள்ளார்.

அந்தவகையில் அவர் அந்த பதிவில் குறிப்பிட்டதாவது : டி20 கிரிக்கெட்டில் ரிஷப் பண்டை விட தற்போது இஷான் கிஷன் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் முன்னிலை படுத்தப்பட்டுள்ளனர். இது ஒரு அருமையான முடிவு. அதோடு இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், சூரியகுமார் யாதவ் ஆகியோர் முதல் 4 வீரர்களாக இருக்கின்றனர்.

- Advertisement -

இவர்களை தவிர்த்து ரஜத் பட்டித்தார் 5 ஆவது இடத்துக்காக தீபக் ஹூடா மற்றும் ராகுல் திரிபாதி ஆகியோருடன் போட்டிக்கு உள்ளார். என்னைப்பொறுத்தவரை இந்த பேட்டிங் ஆர்டர் தான் அடுத்த 2024 ஆம் ஆண்டு டி20 உலககோப்பைக்கான தேர்வாக இருக்கும் என்று நினைக்கிறன். மேலும் இந்த இலங்கை தொடருக்காக தேர்வு செய்யப்பட்ட வீரர்களே டி20 உலககோப்பையின் கோர் அணியாகவும் இருக்கும் என தான் நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : தேங்க் யூ மிஸ்டர் ஐசிசி – கேரியர் முடிந்ததா? கழற்றி விடப்பட்ட நட்சத்திர வீரருக்கு இந்திய ரசிகர்கள் பிரியா விடை

ஏற்கனவே ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்று முடிந்த டி20 உலககோப்பைக்கு பிறகு இந்திய டி20 அணியில் சீனியர் வீரர்கள் இனி இடம்பெற வாய்ப்பில்லை என்று கூறப்பட்ட வேளையில் தற்போது ஹார்டிக் பாண்டியாவின் தலைமையில் முற்றிலும் இளம் வீரர்களை அடிப்படையாக கொண்ட அணி அறிவிக்கப்பட்டதற்கு ரசிகர்கள் மத்தியிலும் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement